- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படத்துக்காக இப்படி ஒரு பயிற்சியா? காற்றில் சுழன்று சுழன்று கிக் விடும் திசா படானி,...

கங்குவா படத்துக்காக இப்படி ஒரு பயிற்சியா? காற்றில் சுழன்று சுழன்று கிக் விடும் திசா படானி, வைரல் வீடியோ

- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் “கங்குவா” திரைப்படத்தில் திசா படானி கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரபல பாலிவுட் நடிகையான திசா படானி “லோஃபர்” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “எம்.எஸ்.தோனி” திரைப்படத்தில் அழகு பதுமையாக வலம் வந்து இளைஞர்களின் உள்ளங்களை கொள்ளைக்கொண்டார்.

அதன் பின் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்த திசா படானி கவர்ச்சி கன்னியாக தற்போது அசரடித்து வருகிறார். அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவேற்றும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தை திணறடித்து வருகிறது. அந்தளவுக்கு சொக்க வைக்கும் இளமையோடு பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் திசா படானி.

- Advertisement -

இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு அசரவைக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார் திசா படானி. சமீப காலமாக “கங்குவா” திரைப்படத்திற்காக பல ஸ்டண்ட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் திசா படானி. அந்த வகையில் தற்போது திசா படானி ஸ்டண்ட் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் திசா படானி காற்றில் சுழன்று சுழன்று தனது காலால் கிக் விடுகிறார். இந்த வீடியோ ஸ்லோ மேஷனில் எடுக்கப்பட்டுள்ளதால் பார்ப்பதற்கே அட்டகாசமாக இருக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் “கங்குவா” திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திசா படானி நடிக்க, ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்