நடிகர் கமல்ஹாசன் – சரிகா தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற 2 மகள்கள் உள்ளனர். சரிகா – கமல் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டனர். ஸ்ருதிஹாசன் பாடகியாக இருக்கிறார். ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து லாபம் 3 புலி வேதாளம் பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தமிழில் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கில் அதிகமாக படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.
இவரது தங்கை அதாவது கமலின் 2வது மகள் அக்ஷரா ஹாசனும் ஒரு நடிகைதான். விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை. அக்கா தங்கை இருவருமே திருமண வயது கடந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் முரட்டு சிங்கிளாக உள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தனக்கு பிடித்த ஆண் நண்பர்களுடன் லிவிங் டு ரிலேசன்ஷிப் என்ற முறையில் வாழ்க்கை நடத்துவது வழக்கமாக உள்ளது. அதனால் திருமணம் குறித்து கேட்டாலே அவர் பயங்கர அப்செட்டாகி விடுகிறார். அவரது அப்பா கமல் கூட இதுகுறித்து ஸ்ருதிஹாசனிடம் பேச முடியாத நிலையில்தான் இருக்கிறார்.
இதனால் நேர்காணல்களில் ஸ்ருதிஹாசன் பங்கேற்கும் போதும், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டாலும் அவரிடம் மிக முக்கியமான கேள்வியாக உங்கள் திருமணம் எப்போது என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அவரை சந்திக்கும் ரசிகர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பி அவரை டென்சன் செய்து விடுகின்றனர்.
இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது, என்னோட கல்யாணம் எப்போ எப்போ என்று அடிக்கடி கேட்பவர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்க வந்து என் கல்யாணத்துல சாப்பாட்டுக்கு பணம் கொடுக்க போறீங்களா, கரண்ட் பில் கட்ட போறீங்களா, இல்ல இன்விடேஷன் பிரிண்ட் பண்ணித் தர போறீங்களா, எதுவுமே இல்லை. அப்புறம் எதுக்கு, கேட்கறீங்க. இனிமேல் அப்படி கேட்காதீங்க என்று நடிகை ஸ்ருதிஹாசன் கோபத்தின் உச்சத்தில் நெத்தியடியாக கூறி இருக்கிறார்.





