- Advertisement -
Homeபொழுதுபோக்குராம் இயக்கிய பறந்து போ, ஸ்ரீ கணேஷ் இயக்கிய 3 பிஹெச்கே படங்கள் - 9...

ராம் இயக்கிய பறந்து போ, ஸ்ரீ கணேஷ் இயக்கிய 3 பிஹெச்கே படங்கள் – 9 நாட்களில் வசூல் நிலவரம் – முந்தியது யார்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் என்ற பெயரில் ஸ்டார் ஹீரோக்களின் ஹீரோயிசம் பார்த்து பார்த்து ரசிகர்களுக்கு சலித்துப் போய்விட்டது. அதிலும் கார்த்திக் சுப்பராஜ் லோகேஷ் கனகராஜ் அருண்மாதேஸ்வரன் நெல்சன் போன்றவர்கள், எப்போதும் கத்தி துப்பாக்கி அரிவாள் வெட்டுக்குத்து வெடிகுண்டு சத்தம் என கேங்ஸ்டர் படங்களை தந்து தந்து ரசிகர்களை விரக்தி நிலைக்கு கொண்டு போய்விட்டனர்.

அதனால் அமைதியான சந்தோஷமான மென்மையான மன உணர்வுகளை சொல்லும் படங்களே வெளிவராத என அதிருப்தியில் இருந்த ரசிகர்களை சந்தோஷப்படுத்த வந்த சமீபத்திய கதையம்சம் கொண்ட படங்கள் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டு இருக்கின்றன. லப்பர் பந்து டூரிஸ்ட் ஃபேமிலி குடும்பஸ்தன் படங்களின் வரிசையில் இப்போது 3 பிஹெச்கே பறந்து போ போன்ற படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

- Advertisement -

எட்டு தோட்டாக்கள் குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான படம் 3 பிஹெச்கே. சரத்குமார் தேவயானி சித்தார்த் மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிடில் கிளாஸ் குடும்பத்தில் சொந்த வீடு கட்டும் கனவுகளை அற்புதமாக சொன்ன படமாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

அதே போல் இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்சி சிவா நாயகனாக நடித்துள்ள பறந்து போ படம், குழந்தைகளின் கனவுகள் எண்ணங்களை சொல்லும் ஒரு யதார்த்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. கிரேஸ் ஆண்டனி அஜூ வர்கீஸ் அஞ்சலி விஜய் ஜேசுதாஸ் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

கடந்த 4ம் தேதி வெளியான பறந்து போ படம், இதுவரை 9 நாட்களில் 7.2 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது. இன்னும் இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே இருந்து வருவதால் இன்னும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கற்றது தமிழ் தங்க மீன்கள் பேரன்பு தரமணி படங்களின் வரிசையில் இருந்து ராமின் இயக்கத்தில் இது வித்யாசமான ஒரு படமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதே போல் கடந்த 4ம் தேதி வெளியான 3 பிஹெச்கே படத்துக்கும் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதுடன் திரையரங்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த 4ம் தேதி ரிலீஸான நிலையில் கடந்த 9 நாட்களில் 10 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது. இந்த படத்துக்கும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்