- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகரின் பிறந்த நாளை கொண்டாட, பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி 3 ரசிகர்கள்...

பிரபல நடிகரின் பிறந்த நாளை கொண்டாட, பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி 3 ரசிகர்கள் பலி… இளைஞர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர்…

- Advertisement -

கேஜிஎப் என்னும் திரைப்படம் மூலம் கன்னட சினிமா மட்டும் அல்லாமல் உலக சினிமாவிற்கும் பரீட்சையமனவர் நடிகர் யஷ். ஆரம்பத்தில் கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த அவர், 2007 ஆம் ஆண்டு வெளியான ஜமடா குட்கி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தனது முகத்தை காட்ட ஆரம்பித்தார்.

இப்படியாக சென்று கொண்டிருந்த அவருக்கு 2008 ஆம் ஆண்டு வெளியான ராக்கி திரைப்படம் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது. அதேசமயம் அந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த யஷ்ஷிற்கு, மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் தான் கே ஜி எஃப்.

- Advertisement -

பான் இந்தியா திரைப்படமாக உருவாகிய இதனை, இயக்குனர் பிரசாந்த் நீல் எடுத்திருந்தார். எடிட்டிங் பணிகளிலும் சரி, திரைக்கதையிலும் சரி, வசனத்திலும் சரி கே ஜி எஃப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுவரை கன்னட சினிமா என்றால் பலரும் கேலி தான் செய்வார்கள். அந்த அளவுக்கு அந்த திரையுலகத்தில் மேக்கிங் பணிகள் மிகவும் சுமாராகவே இருக்கும்.

மலையாளம் தெலுங்கு தமிழ் திரையுலகை காட்டிலும் கன்னட சினிமாவில் மிகப்பெரிய படங்கள் இல்லை என்ற நிலைமையை மாற்றி அமைத்தார் பிரசாந்த் நீல். கே ஜி எஃப் படத்தின் முதல் இரண்டு பாகங்களும், கன்னடம் மட்டுமில்லாமல் உலக சினிமா ரசிகர்களும் கொண்டாடும் வகையில் அமைந்தது. அதிலும் இரண்டாம் பாகம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்தது.

- Advertisement -

இதன் நிலையில் தற்போது யஷ், டாக்ஸிக் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், ரசிகர்கள் யாரும் தன்னை வந்து சந்திக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். இருப்பினும் நடிகரின் பிறந்த நாளை, அம்மாநில ரசிகர்கள் விழா எடுத்துக் கொண்டாடினர். இந்த நிலையில் ஹூப்ளியை அடுத்த, சுர்னாகி கிராமத்தில் எஸ் பிறந்த நாளை முன்னிட்டு பேனர் கட்டுவதில் ரசிகர்கள் தீவிரம் காட்டி வந்தனர்.

நள்ளிரவு ஒரு மணிக்கு இதற்கான பணிகள் நடைபெற்ற போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மூன்று ரசிகர்கள் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தனது ரசிகர்கள் தனது பிறந்த நாளில் இறந்ததை எண்ணி வருந்திய நடிகர் யஷ், அந்த கிராமத்திற்கு நேரில் சென்றார். உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கும் அவர் ஆறுதல் கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்