தமிழ் சினிமாவில் அடிக்கடி விமர்சனங்களில் சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் நடிகைகளில் மிக முக்கியமானவர் திரிஷா. 2003ம் ஆண்டில் லேசா லேசா படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான திரிஷா 23 ஆண்டுகளாக தொடர்ந்து நாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பிறமொழிகளிலும் முன்னணி நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்துள்ள நடிகை திரிஷா 42 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். 2015ம் ஆண்டில் தெலுங்கு பட தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் பிறகு அது கேன்சலாகி விட்டது.
அதன்பிறகு திருமணம் குறித்து ஆர்வமின்றி தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை திரிஷா 23 ஆண்டுகளாகியும் இன்னும் கதாநாயகியாகவே நடித்து வருகிறார். ஆனால் திரிஷா அறிமுகமான காலகட்டத்தில் நடிக்க வந்த பல நடிகைகள் இப்போது சீரியல் நடிகைகளாக அம்மா அக்கா அண்ணி சித்தி கேரக்டரில் நடித்து வருவது கவனிக்கத்தக்கது.
அதே நேரத்தில் அடிக்கடி திரிஷா குறித்த வதந்திகளும் சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அவரது திருமணம் குறித்து அடிக்கடி பொய்யான தகவல் பரவுகிறது. மேலும் சில நடிகர்களுடனும் அவர் இணைத்து பேசப்பட்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜயுடன் அவர் திருமண விழாவில் பங்கேற்றது பெரிய சர்ச்சயைானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது, கேள்விப்பட்ட வரைக்கும் நான் சினிமாவில் இருந்து எப்பவோ விலகி விட்டேன். ஒரு கோடீஸ்வரர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டேன். ஒரே பிரசவத்தில் எனக்கு பிறந்த நான்கு குழந்தைகளை வளர்த்து வருகிறேன்.
இந்த குழந்தைகளுக்கு நேற்றுதான் 2வது பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறேன். வேறு எதையாவது நான் இதில் சேர்க்க வேண்டுமா அல்லது இன்றைய கற்பனை கதைகளில் அளவு முடிந்து விட்டதா? என்று நடிகை திரிஷா அதில் கேட்டிருக்கிறார். இதன்மூலம் தன்னை பற்றிய வதந்திகளுக்கும் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இப்படி ஒரு பதிவை திரிஷா செய்து இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.





