- Advertisement -
Homeபொழுதுபோக்குவணங்கான் போல, புறநானூறு படத்தில் இருந்தும் வெளியேறுகிறாரா சூர்யா? - ரசிகர்கள் குழப்பத்துக்கு அறிக்கையில் சொன்ன...

வணங்கான் போல, புறநானூறு படத்தில் இருந்தும் வெளியேறுகிறாரா சூர்யா? – ரசிகர்கள் குழப்பத்துக்கு அறிக்கையில் சொன்ன பதிலை பாருங்க!

- Advertisement -

நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த படம் நந்தா. அதுவரை அவர் நாயகனாக படங்களில் நடித்த நிலையில், டைரக்டர் பாலா இயக்கிய நந்தா படம் மூலமாக தான் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்தார். அதன்பிறகு விக்ரம், சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் படத்திலும், சூர்யாவை வேற லெவலில் காட்டியிருந்தார் டைரக்டர் பாலா.

தமிழ் சினிமாவில் சூர்யாவின் வளர்ச்சி என்பதில் டைரக்டர் பாலாவின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது. ஏனெனில் நேருக்கு நேர், பூவெல்லம் கேட்டுப்பார் படங்களில் நடித்த போது, சூர்யாவை பார்த்த பலரும், பள்ளி மாணவர் போல இருக்கிறார். நடிக்க, பேச வரவில்லை. நடனம் தெரியவில்லை என விமர்சிக்கப்பட்டார்.

- Advertisement -

ஆனால் மௌனம் பேசியதே படத்தில் நடித்த பிறகு சூர்யாவை ஒரு நாயகனாக டைரக்டர் அமீர் உருவாக்கியிருந்தார். அதன்பிறகு பாலா படங்களில் நடித்த சூர்யா, அடுத்தடுத்த படங்களில் தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்றிக்கொண்டார். குறிப்பாக உன்னை நினைத்து, வாரணம் ஆயிரம், கஜினி, சிங்கம், வேல் உள்ளிட்ட படங்களால் சூர்யா, முன்னணி நட்சத்திர ஹீரோவாக உயர்ந்தார்.

இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் சூர்யா நடித்துள்ளார். விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகளை தொடர்ந்து அந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இப்போது சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் சூர்யா நடிப்பதாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் சூர்யா நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

ஆனால், பல மாதங்களாகியும் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. வணங்கான் படத்தில் இருந்து சூர்யா வெளியேறியதை போல, புறநானூறு படத்தை விட்டும் சூர்யா வெளியேறி விட்டதாக, படம் டிராப் செய்யப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சூர்யா, புறநானூறு படத்துக்கு இன்னும் நிறைய நேரம் தேவைப்படுகிறது. இந்த கூட்டணி ரொம்ப ஸ்பெஷலானது. இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. எங்களது பெஸ்ட் கொடுக்க விரும்புகிறோம். விரைவில் இந்த படத்தை துவங்குவோம் என அதில் கூறியிருக்கிறார். வணங்கான் படத்துக்கு முதலில் இப்படி அறிக்கை வெளியிட்ட சூர்யா தான், பின் அந்த படத்தை விட்டு விலகினார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்