- Advertisement -
Homeபொழுதுபோக்குயுவன் ஷங்கர் ராஜா இந்த முறையாவது ஜெயிப்பாரா? தி கோட் படத்தின் 3வது பாடல் எப்போ...

யுவன் ஷங்கர் ராஜா இந்த முறையாவது ஜெயிப்பாரா? தி கோட் படத்தின் 3வது பாடல் எப்போ வரப்போகுது தெரியுமா? – லேட்டஸ்ட் அப்டேட் இதோ…

- Advertisement -

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (தி கோட்) இந்த படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ரம்யாகிருஷ்ணன், லைலா, கனிகா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படம், விஜயின் 68வது படம். இதற்கு பிறகு விஜய் 69வது படத்தில் மட்டுமே நடிக்க இருக்கிறார். அதன்பிறகு படத்தில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார். வரும் நவம்பரில் இந்த விஜய் 69 படத்தின் துவக்க விழாவும் படப்பிடிப்பும் துவங்க உள்ளது.

- Advertisement -

விஜய் நடித்த தி கோட் படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே இந்த படத்தின் 2 பாடல்கள் வெளிவந்துள்ளன. ஏப்ரல் 14ல் தமிழ் புத்தாண்டு அன்று விசில் போடு என்ற பாடலும், அடுத்து விஜய் பிறந்த நாளில் ஜூன் 22ல் விஜய், பவதாரணி பாடிய சின்ன சின்ன கண்கள் பாடலும் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த இரண்டு பாடல்களுமே பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.

அதிலும் விசில் போடு பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய விமர்சனமும் கிளம்பியது. விஜய் பாடிய பாடல்களில் மிகவும் சுமாரான பாடல் இதுதான் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்தனர். அதிலும் விஜய், பிரசாந்த், பிரபுதேவா ஆடிய நடனக்காட்சியுடன் வெளியான அந்த பாடலிலும் ரசிகர்கள் திருப்தியடையவில்லை.

- Advertisement -

அதே போல் 2வது வெளியான சின்ன சின்ன கண்கள் பாடலும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இந்த பாடலை, மறைந்த பாடகி பவதாரணி குரலில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயுடன் பாடும்படி யுவன் ஷங்கர் ராஜா செய்திருந்தார். ஆனால் இப்படி ஒரு உருக்கமான விஷயத்தை, தனது சகோதரியின் குரலில் உருவாக்கப்பட்ட இந்த பாடலை போதிய சிரத்தை இன்றி அவர் செய்திருப்பதாகவே ரசிகர்கள் விமர்சித்தனர்.

இப்போது தி கோட் படத்தின் 3வது பாடல் வெளிவர இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளது. முதல் 2 பாடல்களும் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் தந்த நிலையில், இந்த பாடல் ரசிகர்களை கவருமா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தி கோட் படத்தின் 3வது சிங்கிள் பாடல் வெளிவர இருக்கிறது. இந்த பாடலாவது ரசிகர்ளை கவருமா, யுவன் ஷங்கர் ராஜா வெற்றி பெறுவாரா என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்