நடிகர் அஜீத்குமார், கடந்த அக்டோபர் மாதம் துவக்கத்தில் இருந்து விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு நடித்து வருகிறார். இப்போது சரியாக 5 மாதங்கள் கடந்து 10 நாட்களாகிறது. ஆனால் இதுவரை விடாமுயற்சி படம், குறிப்பிட்ட இடத்தை அடையாமல், ஏராளமான நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு, அஜர்பைஜானில் நடந்து வந்த நிலையில், அடிக்கடி மணல் புயல், பனிப்புயல், கனமழை, கடும் குளிர் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது. இப்படி பல நாட்கள் படம் பிரேக்கப் ஆன நிலையில் படத்தில் பெரும்பாலான காட்சிகள் இன்னும் படம்பிடிக்கப்படாமல் இருக்கி்னறன.
குறிப்பாக படத்தின் நாயகன், நாயகியான அஜீத்குமார் திரிஷா நடித்த காட்சிகள் பெரும்பலானவை இன்னும் படம்பிடிக்கப்படவில்லை. அப்படி என்றால் 4, 5 மாதங்களாக அஜர்பைஜானில் என்ன ஷூட்டிங் நடத்தப்பட்டது என்று கேட்டால், அதற்கான பதில் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
அதாவது நடிகர் அஜீத்குமாரை பொருத்தவரை ஒரு நேரத்தில் ஒரு படத்தில்தான் நடிக்கிறார். மொத்தமாக 3 மாதங்கள் வரை கால்ஷீட் தந்து விடுகிறார். அதே நேரத்தில் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட தேதிகளில் ஷூட்டிங்கை சரியாக நடத்தி முடித்தால், மற்ற நடிகர், நடிகைகளின் கால்ஷீட்டும் பாதிக்காது. படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் தேவையற்ற செலவுகள் ஏற்படாது.
ஆனால் விடாமுயற்சி படத்தின் டைரக்டர் மகிழ்திருமேனி, சில காட்சிகளை ஒருமுறை எடுத்த பிறகு 4 நாட்களுக்கு மீண்டும் அந்த ஒரே காட்சியை எடுத்துக்கொண்டு இருப்பது வழக்கமாம். இதனால் தான் ஒரே காட்சியை திரும்ப திரும்ப எடுத்த வகையில் படப்பிடிப்பு பாதியை கூட இதுவரை கடக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இப்போது அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிறார் நடிகர் அஜீத்குமார். இந்த சூழலில் இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பு 70 நாட்கள் வரை நடத்த வேண்டும். அதில் அஜீத்குமார் நடிக்க வேண்டிய நாட்கள் எவ்வளவு என்று முடிவாக சொல்ல முடியாது. அதனால் அவரது கால்ஷீட் 2 மாதங்கள் வரையாவது தேவைப்படும் என்று டைரக்டர் மகிழ் திருமேனி கூறியிருக்கிறார். இதனால் பயங்கர அப்செட்டில் இருக்கிறார் நடிகர் அஜீத்குமார்.





