- Advertisement -
Homeபொழுதுபோக்குகாதலைத் தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் படத்தை இயக்குகிறார் 96 பிரேம்குமார்... கார்த்தி கதாநாயகனாகும் படத்தில் அரவிந்த்சாமிக்கும்...

காதலைத் தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் படத்தை இயக்குகிறார் 96 பிரேம்குமார்… கார்த்தி கதாநாயகனாகும் படத்தில் அரவிந்த்சாமிக்கும் இடம் உண்டாம்…

- Advertisement -

தமிழ் சினிமா காலம் தொட்டது முதல், காதல் படங்களுக்கென்று தனி முக்கியத்துவம் இருந்துதான் வருகிறது. ஒவ்வொரு இடைப்பட்ட காலத்திலும், மனதை உருக்கும் காதல் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வருகிறது. காதல், காதலுக்கு மரியாதை, 7 ஜி ரெயின்போ காலனி, விண்ணைத்தாண்டி வருவாயா என ஒவ்வொரு திரைப்படங்களும், ஒவ்வொரு விதமான காதல் கதையைச் சொல்ல அந்த படங்களை ரசிகர்கள் இன்று வரை கொண்டாடி வருகின்றனர். இந்த வரிசையில், ரசிகர்களை அவர்கள் பள்ளி காலத்திற்கு கொண்டு சென்று, காதலை நினைவூட்டிய திரைப்படம்தான் 96.

பள்ளிப் பருவத்தில் இனம் புரியாத அன்புக்கு உள்ளாகும் இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிய, பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்ததால் என்னவெல்லாம் பேசிக் கொள்வார்கள் என்பதை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. ராம் ஜானு இருவருக்குள்ளும் சொல்லப்படாத காதலை, சரியாக சொல்லி கைத்தட்டல்களை அள்ளினார் இயக்குனர் பிரேம்குமார்.

- Advertisement -

ராம் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி, கரை வந்த பிறகே பாடலில் தொடங்கி படம் முடியும் வரை தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கலங்கடித்தார். புகைப்பட கலைஞராக நடித்த அவர், தனது மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியராகவும், தனது காதலி முன்பு அப்பாவியான மனிதராகவும் நடித்து சபாஷ் போட வைத்தார்.

96 திரைப்படத்தின் மற்றொரு வெற்றிக்கு முக்கிய காரணம் யார் என்றால், நிச்சயம் அது ஜானு கதாபாத்திரத்தில் நடித்த திரிஷாதான். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு த்ரிஷாவுக்கு திருப்புமுனையாக 96 திரைப்படம் அமைந்தது. பிரிந்த காதலனை பார்க்கும்போதும் சரி, அவன் நடந்ததை கூறும் போது கேட்கும் இடத்திலும் சரி, கண்களிலேயே உணர்ச்சிகளை கச்சிதமாக வெளிப்படுத்தி கொண்டாடப்பட்டார் இந்த ஜானு.

- Advertisement -

96 திரைப்படத்திற்கு பக்க பலமாக இசையும் அமைய, திரையிட்ட இடங்கள் எல்லாம் காதல் திருவிழாவாக கொண்டாடினார்கள் ரசிகர்கள். இரண்டாம் பாதியில் இருவர் மட்டுமே உரையாடும் காட்சிகள் படத்தில் இருந்தாலும், அதனை ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டாமல் அற்புதமாய் காட்சிப்படுத்தியிருந்தார் படத்தின் இயக்குனர் பிரேம்குமார். வாழ்வின் ஏதோ ஒரு சூழ்நிலையால் பிரிந்த காதலர்கள், ஏதாவது ஒரு சமயத்தில் இந்த திரைப்படத்தை பார்க்கும் போது கலங்கிதான் போவார்கள்.

இப்படி தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்த 96 திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் பிரேம்குமார், அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து படம் பண்ண இருக்கிறார். முழுக்க முழுக்க குடும்பத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தை, சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் பிரீ ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்