- Advertisement -
Homeபொழுதுபோக்குஏவிஎம் நிறுவனம் ரீமேக்கில் தயாரிக்க போவது சூர்யா நடித்த இந்த படமா? இது தமிழில் வேற...

ஏவிஎம் நிறுவனம் ரீமேக்கில் தயாரிக்க போவது சூர்யா நடித்த இந்த படமா? இது தமிழில் வேற லெவலில் சக்ஸஸ் ஆன படமாச்சே – தெலுங்கு ரசிகர்களுக்கு குஷிதான்

- Advertisement -

ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக பல படங்களை தயாரித்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக தயாரிப்பை நிறுத்தியிருந்த இந்த நிறுவனம், சமீபத்தில் உதவி இயக்குநர்கள் தங்களது திரைக்கதை ஸ்கிரிப்டுகளை அனுப்பி வைக்குமாறு அழைப்பு விடுத்தது. இதில் தகுதியான திரைக்கதைகளை படமாக தயாரித்து, புதுமுக இயக்குநர்களை உருவாக்கவும் முயற்சித்தது.

இந்நிலையில், சூர்யா நடிப்பில் வெளிவந்து தமிழில் சக்கைப்போடு போட்ட ஒரு படத்தை ரீமேக் செய்ய இப்போது முடிவெடுத்துள்ளது. இந்த படம் ஏற்கனவே, தமிழில் இருந்து தெலுங்குக்கு டப் செய்யப்பட்ட படம்தான் என்றாலும், இதை தமிழில் இருந்து நேரடியாக தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளது.

- Advertisement -

தமிழில் வெளிவந்த சூர்யா படங்களில் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. படத்தில் ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகள் இருந்ததால், அடுத்தடுத்த கட்டத்தில் படம், விறுவிறுப்பாக கதையை கொண்டு போனது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபுவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளரான கேவி ஆனந்த் இயக்கிய அயன் படத்தை தான், ஏவிஎம் நிறுவனம், தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறது. இந்த படத்தில், கதாநாயகியாக நடித்திருந்தது தமன்னா என்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில், ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலின் மூலம் தமன்னா, தெலுங்கில் மிக பிரபலமாகி விட்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.

- Advertisement -

அயன் படத்தை இயக்கிய கேவி ஆனந்த், இந்த படத்தை வேற தரத்தில் எடுத்திருந்தார். வெளிநாடுகளில் இருந்து வைரம் கடத்தி வரும் சூர்யா, பிரபுவின் நண்பர் மகனாக இருப்பார். ஒரு கட்டத்தில் தொழில் போட்டியில் பிரபுவை கொன்றுவிட, வில்லனை சூர்யா பழிவாங்குவார். முன்னதாக வில்லன் செய்யும் கடத்தலை, விமான நிலையில் கஸ்டம்ஸ் ஆபிசரான பொன்வண்ணனிடம் இருந்து காட்டி கொடுப்பார்.

தெலுங்கில் ரீ மேக் செய்யப்படும் இந்த அயன் படத்தில் சூர்யா, தமன்னா, ஜெகன், பிரபு, ரேணுகா, பொன்வண்ணன், கருணாஸ் போன்ற முக்கிய கேரக்டர்களில் நடிக்கப் போவது யார் என்ற விவரம் இன்னும் வெளிவரவில்லை. எனினும் தெலுங்கில் பிரபலமான நடிகர்களை இந்த படத்தில் நடிக்க வைக்க, ஏவிஎம் நிறுவனம் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை. தெலுங்கில் பிரபலமான இயக்குநர் ஒருவரிடம் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்