- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல இயக்குநரின் வீட்டுக்குச் சென்று நடிக்க வாய்ப்பு கேட்ட நடிகர் விஜய், அதுக்கு டைரக்டர் சொன்ன...

பிரபல இயக்குநரின் வீட்டுக்குச் சென்று நடிக்க வாய்ப்பு கேட்ட நடிகர் விஜய், அதுக்கு டைரக்டர் சொன்ன அந்த பதில் – இப்ப ரொம்பவும் பீல் பண்றாராம்

- Advertisement -

ஓடுகிற குதிரை மீதுதான் பணம் கட்ட முடியும் என்று சொல்வார்கள். அந்த வகையில், இப்போது தமிழ் சினிமாவில் சில நடிகர்களை நம்பித்தான் பல நூறு கோடிகளில் படம் எடுக்க முடிகிறது. போட்ட பட்ஜெட்டை விட, பலமடங்கு லாபத்தை தயாரிப்பாளர்களால் சம்பாதிக்க முடிகிறது. அதே போல், இப்படி கொள்ளை லாபம் கொழிக்கிற வகையில், படம் தருகிற இயக்குநர்களுக்கும் கிராக்கி கூடி வருகிறது.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் அதிக லாபம் தருகிற, வசூல் மழையில் எதிர்பார்த்ததை விட பலமடங்கு தருகிற நடிகர்கள் என்றால், அவர்கள் நான்கு பேர்தான். அவர்கள் ரஜினி, கமல், விஜய், அஜீத் ஆகிய நான்கு டாப் ஸ்டார்களை மட்டுமே, சினிமாவில் ஓடுகிற குதிரைகளாக நம்பி பணத்தை எவ்வளவு கொட்டினாலும், திரும்பவும் அதைவிட பலமடங்கு அள்ளிவிடலாம்.

- Advertisement -

ஆனால், இப்போது அப்படி பெரிய வசூல் மன்னனாக திகழ்ந்தாலும் ஆரம்ப கட்டத்தில், அறிமுக நடிகர்களாக சாதாரண படங்களில் நடிக்கும் போது, ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும், அறிமுகமும் இல்லாத போது, பெரிய இயக்குநர்களை அவர்கள் நாடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில், பிரபல இயக்குநர் படத்தில் நடிக்கும் போது, கவனிப்பு அதிகமாக இருக்கும்.

நடிகர் விஜய், சினிமாவில் நடிக்க வந்த சில ஆண்டுகளில் அவரது படங்கள் எதுவும் பெரியதாக பேசப்படவில்லை. டைரக்டர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்பது மட்டும்தான் அவரது அடையாளமாக இருந்தது. ஒரு படம் கூட விஜய் பெயர் சொல்லும் விதமாக அமையவில்லை. இது விஜய்க்கும், அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கும் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

- Advertisement -

இச்சூழலில், நடிகர் விஜய்க்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கும் படத்தில் யதார்த்தமான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அவரது படத்தில் புகழும் கிடைக்கும் என்பதும் காரணம். இதையடுத்து தன் மகன் விஜயை அழைத்துக்கொண்டு பாரதிராஜாவின் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து, விஷயத்தை கூறியுள்ளனர். ஆனால், பாரதிராஜா மறுத்துவிட்டார்.

விஜய் பெரிய நடிகராக வளரத் துவங்கிய பின், ஒருமுறை விஜயிடம் பேசிய பாரதிராஜா, நீ வந்து சான்ஸ் கேட்டப்பவே, உன்னை வெச்சு படம் பண்ணியிருக்கணும். மிஸ் பண்ணிட்டேன் என்று கூறி பீல் செய்திருக்கிறார். ஆமாம் சார், அந்த நாள் எனக்கும் ஞாபகம் இருக்கு சார் என்று விஜய் கூறியிருக்கிறார். அதாவது, எனக்கு நீங்கள் நடிக்க வாய்ப்பு தராத அந்த நாளை, நான் இன்னும் மறக்கவில்லை என்று மறைமுகமாக குத்திக்காட்டி சொல்லி இருக்கிறார் விஜய்.

- Advertisement -

சற்று முன்