- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்ரம் மட்டும் ஓகே சொன்னா அந்த படத்தை 2ம் பாகமாக கொடுப்பேன்… அதுல சரத்குமார் குஷ்புவை...

விக்ரம் மட்டும் ஓகே சொன்னா அந்த படத்தை 2ம் பாகமாக கொடுப்பேன்… அதுல சரத்குமார் குஷ்புவை மறுபடி நடிக்க வைப்பேன் – இயக்குனர் ராஜகுமாரன் தந்த ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிசெய்தவர் ராஜகுமாரன். பிறகு நீ வருவாய் என படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அஜீத்குமார் தேவயானி பார்த்திபன் சண்முகசுந்தரம் விஜயகுமார் பாத்திமா பாபு ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

இதையடுத்து நடிகர் சரத்குமார் சியான் விக்ரம் குஷ்பு தேவயானி உள்ளிட்டோர் நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை ராஜகுமாரன் இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை வெற்றியை பெறவில்லை. ஆனால் இந்த படத்தை ராஜகுமாரன் இயக்கிய போதுதான் தேவயானிக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

- Advertisement -

விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் சரத்குமார் சக்திவேல் கவுண்டர் கேரக்டரில் அண்ணனாகவும் அவருக்கு தம்பியாக சியான் விக்ரமும் நடித்திருந்தனர். சரத்குமாருக்கு மனைவியாக குஷ்பு நடித்திருந்தார். படத்தில் சினிமா நடிகையாக வரும் தேவயானியை விக்ரம் விரும்புவார். ஆனால் தேவயானி அவரது காதலை ஏற்க மறுப்பதுதான் படத்தின் கதைக்களமாக இருந்தது.

இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. குறிப்பாக நடிகையாக தேவயானி, அவரை காதலிக்கும் ஜமீன்தார் வீட்டு பையனாக விக்ரம் என கதைக்களம் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. ஆனாலும் இந்த படத்தை இப்போது 2ம் பாகமாக வெற்றிப் படமாக தர முடியும் என்று இயக்குனர் ராஜகுமாரன் உறுதியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, ரொம்பவும் சூப்பரான ஒரு படம் பண்ணி இருக்கிறோம். மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கிற படங்களை எடுக்கிறது ஒரு கலை. நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஒரு கலை. அது ஒரு ஆர்ட். இயக்குனர் விக்ரமனுக்கு பிரமாதமாக தெரியும். அவரிடம் இருந்ததால் எனக்கும் அந்த கலை அருமையாக தெரியும். இப்போதும் நான் ரெடியாக இருக்கிறேன்.

நடிகர் விக்ரம் ஓகே சொன்னால், அவரது மகன் துருவ் விக்ரமை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை 2ம் பாகமாக கொடுப்பேன். சரத்குமார் குஷ்புவை அதே கேரக்டரில் மீண்டும் நடிக்க வைப்பேன். அந்த படத்தை எடுக்க என்னால் முடியும். நான் ரெடியாக இருக்கிறேன் என்று இயக்குனர் ராஜகுமாரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்