- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் டிசம்பர் 12ம் தேதி சூப்பர் ஸ்டார் பிறந்த நாள், இந்த முறை ரசிகர்களுக்கு ஸ்பெஷல்...

வரும் டிசம்பர் 12ம் தேதி சூப்பர் ஸ்டார் பிறந்த நாள், இந்த முறை ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அயிட்டம் ரெண்டு இருக்குதாம் – தலைவரே ஜமாய்ங்க

- Advertisement -

டிசம்பர் மாதம் 12ம் தேதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள். வழக்கமாக இதுபோன்ற பிறந்த நாளில் ரஜினிகாந்த், சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் இருக்க மாட்டார். வழக்கமாக இமயமலைக்கு சென்றுவிடுவார். அங்கு போய் யோகா, தியானம் என அந்த நாளை தனிமையில் கழிப்பதுதான் அவரது வழக்கம்.

ஆனால், சில ஆண்டுகளாக அவரது பிறந்த நாளில் சென்னையில் தான் இருக்கிறார். அன்று காலை, வீட்டின் முன் திரண்டிருக்கும் தனது ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த், வாழ்த்துகளை தெரிவிக்கும் ரசிகர்ளுக்கு நன்றி தெரிவித்து சென்றுவிடுவார். அங்கு இருக்கும் மீடியாக்கள் ஏதேனும் கேள்வி எழுப்பும் பட்சத்தில், அவசரமாக பதில் அளித்துவிட்டு வீட்டுக்குள் போய் விடுவார்.

- Advertisement -

மற்ற நடிகர்கள் எல்லாம் பிறந்த நாளை, விழாவாக கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்கள் சார்பில் விழா நடத்தப்பட்டு, அதில் அந்த நடிகர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவார். ரசிகர்கள் மத்தியில் ஏதேனும் பேசுவார். நன்றி தெரிவிப்பார். இசை நிகழ்ச்சி போன்றவை நடத்தப்படும்.

ஆனால் ரஜினிகாந்தை பொருத்த வரை அதுபோன்ற எந்த நிகழ்வுகளுக்கும் அவர் சம்மதிப்பது இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமை ரசிகர் மன்றங்கள் சார்பில், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல், இனிப்புகள் வழங்குதல், கோவிலில் நடிகர் பெயரில் அர்ச்சனை செய்து வழிபடுதல், அரசு மருத்துவமனைக்கு சென்று ரொட்டி, பால், பழங்கள் போன்றவற்றை நோயாளிகளுக்கு வழங்குதல் என தங்களது அபிமான நடிகர் பிறந்த நாளை, ரசிகர்களாக கொண்டாடுகின்றனர்.

- Advertisement -

ஆனால், ரஜினிகாந்த் இதுபோன்ற ஆரவாரமான நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது இல்லை. இமயமலைக்கு செல்வது, அல்லது குடும்பத்துடன் அந்த நாளை கழிப்பதுதான் அவரது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை மட்டும் வித்தியாசமாக, தனது ரசிகர்களுக்காக அவர் 2 சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறார்.

அதாவது, வரும் டிசம்பர் அன்று அவர் தற்போது, தசெ ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி 170 படத்தின் டைட்டில் வெளியிடப்படுகிறது. அதே போல் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகிறது. இது ரஜினியின் பிறந்த நாள் பரிசாக, ரசிகர்களுக்கு ரஜினி செய்த ஏற்பாடாக இருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரஜினி பிறந்த நாளை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்