- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிச்சா ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியா தான் நடிப்பேன், அடம்பிடிச்ச பிரபல ஹீரோ - அப்புறம் மார்க்கெட்...

நடிச்சா ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியா தான் நடிப்பேன், அடம்பிடிச்ச பிரபல ஹீரோ – அப்புறம் மார்க்கெட் இல்லாம பல வருஷமா சும்மா இருந்தீங்களே பாஸ்

- Advertisement -

சினிமாவில் ஏற்றமும் இறக்கமும் உயர்வும் தாழ்வும் அப்பும் டவுனும் இருக்கத்தானே செய்யும் என்று கவுண்டமணி பாணியில் கிண்டலாக சொன்னாலும் சில நடிகர்கள், நடிகையர் வாழ்வில் இது மிகப்பெரிய கசப்பான உண்மையாக இருக்கிறது. சிலர் முன்னணி நடிகராக இருந்துவிட்டு, அடுத்த சில படங்களிலேயே தோல்வி காரணமாக காணாமல் போய்விடுவர்.

ஆனால், மார்க்கெட் இருக்கும்போது இந்த ஹீரோயின் தான் வேண்டும், இந்த இசையமைப்பாளர் தான் வேண்டும், இப்படிப்பட்ட காஸ்ட்யூம்தான் வேண்டும், இப்படிப்பட்ட கதை தான் வேண்டும் என பிரபல ஹீரோக்கள், ஹீரோயின்கள் அடம்பிடிப்பது தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை வழக்கமாக நடக்கிற ஒன்றுதான்.

- Advertisement -

ராஜீவ் மேனன் இயக்கத்தில், மலையாள நடிகர் மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், அஜீத்குமார், தபு, அப்பாஸ் என பிரபல நட்சத்திரங்கள் நடித்த படம் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படத்தை, கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் ஹிட் ஆனது.

இந்த படம் வெளிவருவதற்கு முன்பு, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் ஜீன்ஸ். ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்த இந்த படத்தில், இரட்டையர் வேடத்தில் பிரசாந்த் நடித்திருந்தார். நாசர், எஸ்வி சேகர், செந்தில், ராஜூ சுந்தரம் குறிப்பாக முக்கிய கேரக்டரில் லட்சுமி நடித்த இந்த படம் மெஹா ஹிட் படமாக அமைந்தது. 7 அதிசயங்களை இந்த படத்தில் காட்டியிருந்தார் ஷங்கர்.

- Advertisement -

இதைத்தொடர்ந்துதான் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் முதலில் அஜீத்குமார் கேரக்டரில் நடிக்க, நடிகர் பிரசாந்திடம் தான் பேசப்பட்டது. ஆனால் அவர், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படத்தில் அவருக்குதான் ஜோடியாக நடிப்பேன். தபு வுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். அதன்பிறகுதான் இந்த படத்தில் அஜீத்குமார் நடிக்க முடிவானது.

ஆனால் இந்த படத்தில், அஜீத்குமார் கேரக்டரில் பிரசாந்த் நடித்திருந்தால் இன்னும் இன்னும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருக்கும். ஆனால், இப்படி நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பை எல்லாம், தனக்கென ஒரு பாலிசி, இமேஜ் உருவாக்கிக்கொண்டு மறுத்ததால், ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளே இல்லாமல் முடங்கும் நிலை பிரசாந்துக்கு ஏற்பட்டது. இது பிரசாந்த் மட்டுமின்றி பல நடிகர்களுக்கு பொருந்தும். நீண்ட இடைவெளிக்கு பின், இப்போதுதான் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் பிரசாந்த் ரீ என்ட்ரி தருகிறார்.

- Advertisement -

சற்று முன்