- Advertisement -
Homeபொழுதுபோக்குகேப்டன் பிரபாகரன் 2 படத்தில் நான் நடிக்க இப்பவே ரெடி - நடிகர் விஜயகாந்த் மகன்...

கேப்டன் பிரபாகரன் 2 படத்தில் நான் நடிக்க இப்பவே ரெடி – நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நெகிழ்ச்சி!

- Advertisement -

இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் கடந்த 1991ம் ஆண்டில் வெளியான படம் கேப்டன் பிரபாகரன். நடிகர் விஜயகாந்த் நடித்த 100வது படம் இது. அப்போதே மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றது. சரத்குமார் ரம்யா கிருஷ்ணன் ரூபிணி மன்சூர் அலிகான் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் இந்த படத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் படம் வேற லெவலில் இருந்தது.

இந்நிலையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு கேப்டன் பிரபாகரன் படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை அந்த படத்தின் இயக்குனர் ஆர்கே செல்வமணி நடிகர் மன்சூர் அலிகான் நடிகை அம்பிகா மற்றும் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் உள்ளிட்டோர் கேப்டன் பிரபாகரன் படத்தை பார்த்தனர். கேப்டன் பிரபாகரன் படம் பார்த்த பிறகு விஜயகாந்தின் இளைய மகன் நடிகர் சண்முக பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

- Advertisement -

அப்போது நடிகர் சண்முகபாண்டியன் கூறியதாவது, கேப்டன் பிரபாகரன் படம் உருவானபோது நான் பிறக்கவில்லை. இந்த படத்தை டிவியில் தான் பார்த்து இருக்கிறேன். இப்போதுதான் தியேட்டரில் திரையில் பார்த்தேன். நிறைய இடங்களில் அப்பாவை பார்த்து அழுதுவிட்டேன். அவரை அவ்வளவு அழகாக காண்பித்திருக்கிறார்கள்.

படத்தில் அவரது டயலாக்கும் சூப்பராக இருந்தது. குறிப்பாக அந்த ஓப்பனிங் சண்டைக்காட்சியை என்ஜாய் பண்ணி பார்த்தோம். பாடல்களும் நன்றாக இருந்தது. இந்த படத்தை 1990ல் எடுத்தார்கள் என்பதை நம்ப முடியவில்லை. படம் எங்குமே போர் அடிக்கவில்லை. இந்த மாதிரி படங்களை இப்போது உள்ள இயக்குனர்கள் எடுக்க வேண்டும்.

- Advertisement -

என்னை வைத்து கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 எடுப்பதாக இயக்குனர் செல்வமணி கூறியிருக்கிறார். நான் அவருக்கு கால்சீட் கொடுக்க ரெடியாக இருக்கிறேன். நேற்று மதுரை மாநாட்டில் அப்பாவை அண்ணன் என அழைத்து விஜய் பேசி இருக்கிறார். விஜய் அவரை அண்ணனாக பார்க்கிறார். விஜய்க்கு சின்ன வயதில் இருந்து அப்பாவை அவருக்கு தெரியும் என்பதால் அண்ணன் என்கிறார்.

தேமுதிக தொண்டர்களை விஜய் தன் பக்கம் இழுக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த சண்முகபாண்டியன், அப்பா மக்கள் சொத்து. அவர் இந்த படத்தில் கூட மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று டயலாக் பேசி இருக்கிறார். யார் யாரை இழுக்கிறார் என்பதை மக்கள் சொல்வார்கள். இப்போது கேப்டன் பிரபாகரன் படம் பற்றி மட்டுமே பேசுவோம். இந்த படம் மாதிரி அவரின் பல படங்களை ரி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று நடிகர் சண்முக பாண்டியன் கூறினார்.

- Advertisement -

சற்று முன்