விஜய்யின் பிறந்தநாள் வருகிற 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் இரண்டே நாட்கள்தான் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிக ஆவலோடு விஜய்யின் பிறந்தநாளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அதுவும் விஜய்யின் பிறந்த நாள் அன்று “லியோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “அல்டர் ஈகோ நான் ரெடி” என்ற பாடல் வெளிவரவுள்ளதால் ரசிகர்கள் குதூகலத்தில் இருக்கின்றனர்.

எப்போதும் விஜய் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் திருவிழாவை போல் கொண்டாடுவார்கள். மிகப்பெரிய கட் அவுட்கள் வைத்து மாலையுடன் மிக விமரிசையாக விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள்.
குறிப்பாக சில திரையரங்குகளில் விஜய் நடிப்பில் எதாவது ஹிட் அடித்த திரைப்படங்களை மீண்டும் திரையிட்டு திரையரங்கிலேயே கேக் வெட்டி விஜய்க்கு வாழ்த்துகளை கூறுவார்கள். அதே போல் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒவ்வொரு விஜய் பிறந்தநாள் அன்றும் சமூக சேவையில் ஈடுபடுவார்கள்.

இந்த வருட விஜய் பிறந்தநாளிலும் இது போன்ற பல விமரிசையான நிகழ்வுகளை நடத்த விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் வருகிற விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளார்கள்.
அதாவது அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் மிக பிரபலமான டைம் ஸ்குயர் பகுதியில் உள்ள ஒரு பில் போர்டில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறும் வகையில் ஒரு வீடியோவை ஒளிபரப்பி வருகின்றனர். இந்த செய்தி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Happy & proud to feature @actorvijay Anna on the prestigious Times Square Billboard @ New York City to kick start birthday celebrations for #Thalapathy by @CanadaVMI 😍😍😍#HBDThalapathyvijay pic.twitter.com/UAOAdYc6ww
— Kartik (@TheVJClan) June 20, 2023





