- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு மொழியில் மட்டுமே டப்பிங் பேசிய ஹீரோ பிரபாஸ், தியேட்டர் ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா-...

ஒரு மொழியில் மட்டுமே டப்பிங் பேசிய ஹீரோ பிரபாஸ், தியேட்டர் ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா- பான் இந்தியா படம் சலார் வேற லெவலில் இருக்குதே?

- Advertisement -

நடிகர் பிரபாஸ் பாகுபலி படம் மூலம் சகல தரப்பு ரசிகர்களும் ஒரு விரும்பும் முக்கிய முன்னணி ஹீரோ நடிகராக இருந்து வருகிறார். அதற்கு முன்பு தெலுங்கு படங்களில் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக வலம் வந்த அவர், ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் மூலம் மிகப்பெரிய இடத்துக்கு முன்னேறினார்.

தெலுங்கு மொழியில் மட்டுமின்றி தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக இந்த படம் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் சில காட்சிகள் பாகுபலியை போல இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக சலார் வெளியாகிறது. இந்த படம், கேஜிஎப் பாணியில் இருப்பதாக முதல் பேசப்பட்டாலும், இதன் கதை இரண்டு நண்பர்கள் பற்றியது. கேஜிஎப் படத்துக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கேஜிஎப் தொடர்ச்சியாக இதில் எதுவும் இருக்காது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடித்துள்ள பிரபாஸ், பிரமோ மற்றும் படத்தின் இசை வெளியீட்டு விழா எதிலும் கலந்துக்கொள்ள மாட்டேன் என கறாராக கூறியிருக்கிறார். மேலும் இதில் தெலுங்கு மொழி ஒன்றில் மட்டுமே அவர் டப்பிங் பேசி இருக்கிறார். மற்ற மொழிகளில் வேறு டப்பிங் கலைஞர்களை வைத்துதான் டப்பிங் பேச வைக்க உள்ளனர்.

- Advertisement -

ஆனால், நடிகர் பிருத்விராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் அவர்கள் நடிக்கும் படங்களில் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும், அவர்கள் அந்த மொழியில் தான் டப்பிங் பேசுகின்றனர். ஏனென்றால், பிற மொழி படத்தில் நடிக்க வரும்போது அந்த மொழியை கற்றுக்கொண்டு அவர்கள் நடிக்கவே வருகின்றனர். அதனால் கதையையும், அதன் மொழி வளமையையும் உள்வாங்கிக்கொண்டு நடித்து, அந்த கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கின்றனர்.

அதே போல், சலார் படத்துக்கு தெலுங்கில் தியேட்டர் ரைட்ஸ் மட்டும் ரூ. 186 கோடிக்கு வியாபாரம் நடந்திருக்கிறது. இன்னும் மற்ற மொழிகளில் எல்லாம் தியேட்டர் ரைட்ஸ் வாங்கும் போதும், அதுதவிர நான் தியேட்டர்ஸ் ரைட்ஸ் வகையிலும், சலார் படத்துக்கு பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிட்டும் என்ற எதிர்பார்ப்பை இப்போதே சலார் படம் ஏற்படுத்தி வருகிறது. இது வேற லெவலில் பேசப்படும் பான் இந்தியா படமாக இருக்கும் என ரசிகர்கள் இப்போதே பேச துவங்கி விட்டனர்.

- Advertisement -

சற்று முன்