நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கிறார். ஹீரோவாக, வில்லனாக எப்படி நடித்தாலும் அவரை ரசிகர்கள் மகிழ்ச்சியாக வரவேற்று ஏற்றுக்கொள்கின்றனர். அதனால் எந்த கேரக்டர் என்றாலும் விஜய் சேதுபதிக்கு ஓகே தான். ஒரு படத்துக்கு ரூ. 15 கோடி அவரது சம்பளமாக இருக்கிறது.
இயக்குநர் அட்லி, நடிகர் விஜயின் ஆஸ்தான இயக்குநர் என்று அழைக்கப்படுபவர். தெறி, பிகில், மெர்சல் போன்ற விஜய் நடித்த படங்களை தந்தவர். இந்த படங்கள் தந்த அபரிமிதமான வெற்றியால், பாலிவுட்டுக்குச் சென்றார். அங்கு ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி 1150 கோடி ரூபாய்க்கு மேல் அந்த படம் வசூல் சாதனை படைத்துள்ளது.
அடுத்து இயக்குநர் நெல்சன் திலிப்குமார், கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். முதல்படமே மாபெரும் ஹிட் படமாக அமைந்தது. ஹீரோ இல்லாமல், நயன்தாராவை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட பிளாக் காமெடி படம். மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.
இந்த படம் தந்த வெற்றியால் டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் அடுத்து ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை டைரக்ட் செய்தார். ரஜினியை வேற லெவலில் காட்டிய இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. ரஜினிக்கு மிகப்பெரிய மாஸ் படமாக அமைந்ததால், ஜெயிலர் 2ம் பாகமும் எடுக்கப்பட .உள்ளது.
ஒரு காலகட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் சாலிகிராமத்தில் எங்கு காலியிடம், மனை விற்பனைக்கு வந்தாலும் அந்த இடத்தை வாங்க நடிகர்கள் ராமராஜன், செந்தில், இயக்குநர் ராமநாராயணன் மத்தியில் ஒரு போட்டியே நடக்கும். மூன்று பேரில் யாரேனும் ஒருவர் அந்த இடத்தை வாங்கி விடுவார்களாம். அதே முறையை இப்போதைய இயக்குநர்கள் அட்லி, நெல்சன், நடிகர் விஜய் சேதுபதி பின்பற்றுவதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
அதாவது சென்னையில் அடையாறு கேட் எனப்படும் கிரவுண்ட் பிளாசா ஓட்டல் இந்த மாதத்துடன் மூடப்படுகிறது. அந்த சொத்து, ஒரு ரியல் எஸ்டேட் நிர்வாகத்துக்கு மாற்றப்படுகிறது. அங்கு ஒரு மிகப்பெரிய அதிநவீன அபார்ட்மென்ட் ஒன்று கட்டப்படுகிறது. அங்கு ஒரு பிளாட்டின் குறைந்தபட்ச விஙையே ரூ. 10 கோடி. அங்கு அட்லி, நெல்சன், விஜய் சேதுபதி ஆகியோர் ஆளுக்கு ஒரு பிளாட் புக் செய்துவிட்டனர். அடுத்து நயன்தாரா, திரிஷா போன்றவர்களும் பிளாட் புக் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





