- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவருக்கும் ரசிகனாவேன் என்று நம்புகிறேன்... கேள்விக்கு புதிர் போட்ட கமல்ஹாசன்... என்ன இந்தியன் தாத்தா இப்படி...

அவருக்கும் ரசிகனாவேன் என்று நம்புகிறேன்… கேள்விக்கு புதிர் போட்ட கமல்ஹாசன்… என்ன இந்தியன் தாத்தா இப்படி சொல்லிட்டாரு… அப்ப அந்த மனுஷனுக்கு கஷ்டமா இருக்காதா…

- Advertisement -

2022 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியானது விக்ரம் திரைப்படம். கமல்ஹாசனே எதிர்பார்க்காத வகையில், இந்தத் திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. கமல்ஹாசன் மட்டுமின்றி பகத் பாசில், விஜய் சேதுபதி என படத்தில் நடித்த பலரும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்ததால் விக்ரமின் வெற்றி சாத்தியமானது.

 

- Advertisement -

இந்த திரைப்படம் கொடுத்து வெற்றியால் உற்சாகமடைந்த கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் மற்றும் படத்தில் பலருக்கும் பரிசு வழங்கி கௌரவித்தார். விக்ரம் திரைப்படத்திற்கு முன்னதாகவே அவர் நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் இந்தியன் 2. ஆனால் பல்வேறு சிக்கல்களால் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து இழுத்து அடித்து கொண்டே இருந்தது.

 

- Advertisement -

தயாரிப்பு நிறுவனத்துடன் சங்கருக்கு ஏற்பட்ட மோதல், சங்கருக்கும் கமலஹாசனுக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம், படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற விபத்து என இந்தியன் 2 திரைப்படத்திற்கு வந்த சங்கடத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். தற்போது இதையெல்லாம் தகர்த்துவிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார் சங்கர்.

 

அது மட்டுமல்லாமல் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போதே, ஏகப்பட்ட காட்சிகளை வைத்ததால், ஒரே சமயத்தில் அவர் இரண்டு பாகங்களை எடுத்து இருக்கிறார். இதில் இந்தியன் 2 திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது. அதன்பிறகு இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. சங்கரின் முந்தைய திரைப்படங்களின் சாயல் அதில் தெரிந்ததாக ரசிகர்கள் கூறினர். அதேசமயம் சேனாதிபதி தாத்தாவின் மேக்கப் பலருக்கும் பிடிக்கவில்லை. இவ்வளவு பெரிய பிரம்மாண்ட படத்தில் எதற்கு இப்படி ஒரு மேக்கப் செய்திருக்கிறார்கள் என்று பலரும் வெளிப்படையாகவே கேள்வி எழுப்பி வந்தனர்.

 

ட்ரைலரை பார்க்கும் நமக்கும் அந்தக் கேள்வி எழ தான் செய்தது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக மலேசியா சென்று இருக்கும் கமல்ஹாசனிடம், இந்தியன் 2 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் மாற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், இது சங்கரின் பொறுப்பு. நான் இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமானின் ரசிகன். அனிருத் இப்போதுதான் வந்திருக்கிறார். அவரது பாடல்களையும் கேட்க கேட்க நான் ரசிகனாவேன் என்று நம்புகிறேன் என்று பதில் கூறினார்.

- Advertisement -

சற்று முன்