- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு வழியா கன்ஃபார்ம் ஆகிட்டாங்கப்பா... லவ் டுடே இயக்குநரை இயக்கும் விக்னேஷ் சிவன்... ஹீரோயின் யார்...

ஒரு வழியா கன்ஃபார்ம் ஆகிட்டாங்கப்பா… லவ் டுடே இயக்குநரை இயக்கும் விக்னேஷ் சிவன்… ஹீரோயின் யார் தெரியுமா?…

- Advertisement -

போடா போடி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். 2012 ஆம் ஆண்டு துப்பாக்கி படத்துடன் இணைந்து வெளியான அந்த திரைப்படம், தோல்வியை சந்தித்தது. இதன் பிறகு, அடுத்த படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் விக்னேஷ் சிவன். இதன் நடுவே வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு காட்சியிலும் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து நானும் ரவுடிதான் படத்தை கையில் எடுத்தார் அவர். விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான அந்த திரைப்படம், நகைச்சுவை கலந்த டிராமாவாக உருவானது. ஆங்காங்கே நகைச்சுவை காட்சிகள், விஜய் சேதுபதியின் துள்ளாத நடிப்பு, ஆர் ஜே பாலாஜியின் கவுன்டர் வசனம் போன்ற காரணங்களால் நானும் ரவுடிதான் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் திரைப்படத்தில் வித்தியாசமான ஒரு நயன்தாராவை பார்க்க முடிந்தது. காது கேளாத காதம்பரியாக நடித்திருந்த அவர், தனது நடிப்பின் மூலம் அசர வைத்தார். நயன்தாரா திரைப்பட பயணத்தில் நானும் ரவுடிதான் மிக முக்கியமான திரைப்படம் என்று கூறலாம். இந்தப் படத்தின் சூட்டிங் போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதைத்தொடர்ந்து, சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். நவரச நாயகன் கார்த்திக், கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் என ஏராளமான நடித்த இந்தத் திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனத்தை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது மனைவி நயன்தாரா மற்றும் சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர் வைத்து எடுத்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் அஜித்தை வைத்து அவர் அடுத்த படத்தை இயக்குவதாக இருந்தது ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்காமல் போனது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனுக்காக அவர் எழுதி வைத்த எல்ஐசி கதையில், லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாக தகவல் வெளியானது. இதனை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் தயாரிப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக அந்த படத்தை, லியோ படத்தை தயாரித்த லலித் குமார் எடுக்கிறார். இதற்கான பூஜை நேற்று நடைபெற்றது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். எஸ்ஜே சூர்யாவுக்கும் படத்தில் முக்கிய கேரக்டர் இருக்கிறதாம். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரதீப் ரங்கநாதனின் அக்காவாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதன் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்