நடிகர் கமல்ஹாசன் 230 படங்களை கடந்து நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் மிக பிஸியாக இருக்கும் முன்னணி ஹீரோ நடிகர்களில் ஒருவராகவும் இருக்கிறார். படப்பிடிப்புகளிலும் கலந்துக்கொள்கிறார். அரசியல் நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார். இடையிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சனி, ஞாயிறு தினங்களில் வந்துவிடுகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கமல் நடித்த சில படங்கள் தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. நல்ல கதை, சிறந்த நடிப்பை தந்தும் ரசிகர்கள் ஏனோ அந்த படங்களை பெரியதாக ரசிக்கவில்லை. உதாரணமாக அன்பே சிவம், ஆளவந்தான் போன்ற படங்களை சொல்லலாம். இப்போது அந்த படங்கள் ரி ரிலீஸ் செய்யப்படும் போது வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.
இப்படி கமல்ஹாசனின் சில படைப்புகள் காலம் கடந்தும்கூட வெற்றிவாகை சூடும். கமல்ஹாசன், கடந்தாலம் நிகழ்காலம் கடந்து எதிர்கால சிந்தனைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். அதனால்தான் அவர் தனது படங்களில் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்தி, பல வித்யாசமான முயற்சிகளை செய்கிறார். ஆனாலும் சில நேரங்களில் அவருக்கு ரசிகர்கள் அதை ஏற்காமல் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இந்த சூழலில் தான் விக்ரம் படம் அவருக்கு கம்பேக் படமாக அமைந்தது. அதன்பின் இது தனது அறுவடைகாலம் என்பதை புரிந்துக்கொண்ட கமல், இப்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிறார். எந்த கேரக்டராக இருந்தாலும் ஓகே சொல்கிறார்.
இதுவரை தனது படங்களில் மட்டுமே கமல் வில்லனாக நடித்த நிலையில் இப்போது புராஜெக்ட் கே (கல்கி) என்ற பிரபாஸ் படத்தில் வில்லனாக நடிக்கிறார். சம்பளம் ரூ. 150 கோடி பேசப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அவர் ஒதுக்கிய கால்ஷீட் மொத்தமே 20 நாட்கள்தான். அதாவது ஒரு நாளைக்கு கமல் சம்பளம் 7.5 கோடி ரூபாய். இந்த லெவலில் அவரது மார்க்கெட் நிலவரம் உச்சத்தில் உள்ளது.
ஆனால் இந்தியன் 2 மற்றும் 3 படங்களில், பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் அவர் புராஜெக்ட் கே படத்தில் நடிக்கிறாரா, இல்லையா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. இந்நிலையில் இடையில் 3 நாட்கள் காணாமல் போன அவர், புராஜெக்ட் கே படத்தில் 3 நாட்கள் நடித்துவிட்டு திரும்பி இருக்கிறார். இனி மீண்டும் அவர்கள் அழைக்கும்போது 17 நாட்கள் நடித்துக்கொடுத்தால் போதுமானது. ஆக, இரையில் எப்போதும் குறியாக இருந்து வருகிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.





