முதல்வர் விஜய் குறித்து தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது, இசையமைப்பது என் வேலை. டிவி நிகழ்ச்சிகளில் தொகுத்தளிப்பது என் வேலை. எனக்கு பல வேலைகள் இருக்கு. பேசுவதற்கே எனக்கு நேரமில்லை. நான் ஏன் என் பெயரை கெடுத்துக்கிட்டு பொதுவெளியில் வந்து பேசணும்?
முடியாது. பேசாமல் இருக்க முடியாது. அமைதியாக இருக்கவே முடியாது. இது தெரியாதா? இவ்வளவு அமைதியாக இந்த ஜோசப் விஜயால் எப்படி இருக்க முடிகிறது? அவருக்கு ஒண்ணுமே தெரியாதுய்யா. அதிகார வெறியோடு வந்தார். அதை எப்படியோ இந்த ஏமாளிகளை வைத்து வாங்கி விட்டார். இப்போ நிம்மதியாக இருக்கிறார்.
அரசியல் பண்பே அவரிடம் இல்லை. அரசியல் மாண்பே எதுவும் அவர் கத்துக்கலையே. எதுவுமே இல்லாம நேரா சினிமாவில் இருந்து போஸ்டர் ஒட்டியவனையும் எனக்கு சொல்லி சொல்லி சலித்து போயிடுச்சு. நேத்து கூட கட்அவுட்டுக்கு லிட்டர் கணக்குல குடம் குடமா பால் ஊத்தீட்டு இருக்காங்க.
அவன் எல்லாம் அமைச்சர் என்றால் எப்படி இந்த மாநிலம் உருப்படும்? கடந்த 51 ஆண்டுகளாக சினிமாவே வாழ்க்கைன்னு நம்பி கூட்டுப்புழுவா கேரவனுக்குள்ள வாழ்ந்தவர் விஜய். மக்களின் வாழ்க்கை நிலை கனவு முன்னேற்றம் பற்றி இவருக்கு என்ன லட்சியம் குறிக்கோள் தெரியும்? அப்படி இருந்திருந்தால் அவரால் ஒரு நடிகராக அங்கே இருந்திருக்கவே முடியாது.
என்னைக்கோ சினிமாவை விட்டு திமிறிக்கிட்டு வெளியே வந்துவிடுவார். 6 மாசம் சினிமா 6 மாசம் மக்கள் என்று எப்பவோ வந்திருப்பார். ஒன்று பேச்சு அல்லது செயல் என்று இருந்திருக்கும். ஆனால் அவரிடம் எதுவுமே அப்படி இருந்தது இல்லை என்பதுதான் உண்மை.
எதுவுமே இல்லாமல் சினிமாவில் பெற்ற இமேஜை அந்த சினிமா பிம்பத்தை வைத்துக்கொண்டு வாங்கிய ஓட்டுகளால் ஜெயித்து, அந்த பதவியில் வந்து அமர்ந்த உடனே திடீர்ன்னு அவர் வல்லமை உள்ளவராக மாறிவிடுவார் என்று நீங்கள் சொன்னால் அதை நான் எப்படி ஏற்றுக்கொள்வது? என்று ஜேம்ஸ் வசந்தன் அந்த நேர்காணலில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.





