தமிழ் சினிமாவில் குடும்பப் பின்னணி சார்ந்த கதைகளை இயக்குபவர் விக்ரமன். விஜய்க்கு பூவே உனக்காக என்னும் திரைப்படத்தை இயக்கி, அவரது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர். இவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் லிங்குச்சாமி. தனது குருவை போலவே முதல் திரைப்படமாக ஆனந்தம் திரைப்படத்தை எடுத்து, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை கொடுத்தவர்.
படம் ஆரம்பித்தது முதல் முடிவது வரை சீராக ஒரே நேர்கோட்டில் பயணித்து, நல்ல ஒரு பீல் குட் திரைப்படமாக ஆனந்தம் திரைப்படத்தை அவர் எடுத்தார். இதில் நடித்த மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, சினேகா, ரம்பா என அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்ததால் ஆனந்தம் திரைப்படம் வெற்றிக்கொடி நாட்டியது. இதனைத் தொடர்ந்து மாதவனை வைத்து ரன் திரைப்படத்தை அவர் எடுத்தார்.
சாதாரண காதல் கதையை, கமர்சியல் ஆகவும் கொடுக்கலாம் என்பதை திரையில் காண்பித்து, தன்னை ஒரு கமர்சியல் இயக்குனராக நிலை நிறுத்திக் கொண்டார் லிங்குச்சாமி. இதன்பிறகு அஜித்தை வைத்து அவர் எடுத்த ஜி திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் பிற்காலத்தில் இந்த திரைப்படம் பிடித்து பேசிய அவர், இதனை முதலில் மாதவனுக்கு தான் எழுதியதாக தெரிவித்தார்.
2005 ஆம் ஆண்டில் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி திரைப்படம், அவரை தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெறச் செய்தது. விஷால் ராஜ்கிரண் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்லாமல் விஷாலுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய என்ட்ரி ஆக அமைந்தது.
பிறகு பீமா படத்தை இயக்கிய அவர், பையா திரைப்படத்தின் மூலம் தன்னை தயாரிப்பாளராகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். இப்படியாக தொடர்ந்து கமர்சியல் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த அவர், அஞ்சான் திரைப்படத்தில் மிகப்பெரிய அடி வாங்கினார். அந்த திரைப்படத்திற்கு முன் அவர் பேசிய பேட்டியை சமூக வலைதளத்தில் பரவ விட்டு லிங்குசாமியை பலர் கிண்டல் செய்தனர். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் சண்டக்கோழி 2, தி வாரியர் என இரண்டு படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். எங்களையும் சமீபத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில்,
ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்றபோது, நடிகர் விஜய் என்னை நோக்கி வருவதை கவனித்தேன். அவர் நேராக என்னிடம் வந்து சண்டக்கோழி திரைப்படம் சூப்பராக இருந்ததாக கூறினார். தொடக்கத்தில் எனக்கு அவர் மீது சிறிய கோபம் இருந்தது. ஏனென்றால் அந்தப் படத்தின் கதையை முதலில் அவரிடம்தான் கூறினேன். ஆனால் அவர், இல்லை பிரதர். விஷால் போன்ற ஒரு நடிகருக்கு இந்த திரைப்படம் தான் ஒரு நல்ல என்ட்ரியாக இருக்கும் என்று கூறிவிட்டார். அதேசமயம் படத்தின் இரண்டாம் பாதி மிகவும் நன்றாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். என லிங்குசாமி பேசியுள்ளார்.





