நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிநேகா, மீனாட்சி சவுத்ரி ஆகிய இருவரும் அப்பா, மகன் கேரக்டரில் வரும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார். அவருக்கு சம்பளம் மட்டுமே ரூ. 2 கோடி. முதன்முறையாக இந்த படத்தில்தான் மிக அதிக சம்பளம் பெறுகிறார் நடிகர் மோகன்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இரண்டு வளர்ந்த பிள்ளைகளுக்கு தாயாக ஒரு பக்குவப்பட்ட நடிப்பை தந்த திரிஷா, ஒரு எமோஷனல் காட்சியில் தேவையே இல்லாமல் விஜய்க்கு உதட்டு முத்தம் கொடுத்து நடித்திருந்தது ரசிகர்களை வெறுப்பேற்றியது. இந்த காட்சி படத்துக்கு மிக அவசியமற்றதாகவே இருந்தது. விஜய் பேசிய அந்த வசனத்தை போலவே.
இதற்கு முன்பு விஜய் உடன் திரிஷா கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் கில்லி, திருப்பாச்சி ஆகிய இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன. ஆதி, குருவி ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் வந்த லியோ படமும் வெற்றிப்படமாக அமைந்தது. அதுவும் குருவி படத்துக்கு பிறகு பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.
விஜய், திரிஷா இருவரும் இந்த படங்களில் சேர்ந்து நடித்த போது அவர்களுக்குள் ஜோடி பொருத்தமும், கெமிஸ்ட்ரியும் நன்றாக இருப்பதாக விமர்சனம் எழுந்ததால், விஜய் குடும்பத்தில் பிரச்னை எழுந்தது. திரிஷாவுடன் நெருக்கமாக விஜய் நடித்தது சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை என்ற தகவலும் அப்போதே எழுந்தது.
இந்த சூழலில் தனது மனைவி சங்கீதாவின் எதிர்ப்பையும் மீறிதான் லியோ படத்தில் திரிஷாவுடன் விஜய் நடித்துள்ளார். அதுவும் உதட்டு முத்தக்காட்சியில் நடித்தது இன்னும் பிரச்னையை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால்தான், லியோ சக்சஸ் மீட்டில் விஜய் மனைவி சங்கீதா பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் பயில்வான் ரங்கநாதன் அப்போதே நேர்காணலில் கூறியிருந்தார். விஜயும், திரிஷாவை ஏகத்துக்கு புகழ்ந்து தள்ளி, சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகியாக நீடிப்பது பெரிய விஷயம் என பாராட்டி இருந்தார்.
இதற்கிடையே இப்போது ஒரு ஊடகம், இந்த ஆண்டின் ஆன் ஸ்கிரீனில் சிறந்த தம்பதி ( பெஸ்ட் கப்பில்) என்ற விருதை விஜய், திரிஷா என அறிவித்து அவர்களது ஜோடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதாவது சினிமா திரையில் சிறந்த தம்பதி விஜய், திரிஷா என குறிப்பிட்டு பெருமைப்படுத்தியுள்ளது. இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திரிஷா. இது வைரலாகி வருகிறது. ஏற்கனவே இவரால் விஜய், சங்கீதா தம்பதிக்கு இடையே பிரச்னை உள்ள நிலையில், மேலும் குடும்பத்துக்குள் பஞ்சாயத்தை கிளப்பி விட்டுள்ளார் திரிஷா.





