- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிரத்னம் இயக்கத்தில் வெளியாகும் தக்லைப் படம் ரிலீஸ் தள்ளிப் போகிறதா? காத்திருக்கும் லைகா நிறுவனம் -...

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகும் தக்லைப் படம் ரிலீஸ் தள்ளிப் போகிறதா? காத்திருக்கும் லைகா நிறுவனம் – இந்தியன் 3 ரிலீஸ்க்கு இப்படி ஒரு புதிய சிக்கலா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் மணிரத்னம். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன்2 என இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. இதில் பொன்னின் செல்வன் இரண்டாம் பாகம் மட்டும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் தக்லைப் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் நடிகைகள் திரிஷா, அபிராமி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தக்லைப் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. இன்னும் சில வாரங்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

எனினும் டிசம்பர் 10ம் தேதி தக்லைப் படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிறகு ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் என கூறப்பட்ட நிலையில், இப்போது ரிலீஸ் பல மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படும் எனத் தெரிகிறது. இது ஒரு பான் இந்தியா படம் என்பதால் மற்ற படங்களின் குறுக்கீடு எதுவும் இல்லாமல் இந்த படத்தை ரிலீஸ் செய்ய நடிகர் கமலஹாசனும் இயக்குனர் மணிரத்னமும் முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் இந்த படத்தின் ரிலீஸ் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இடைப்பட்ட இந்த ஆறேழு மாதங்களில் வேறு மொழிகளில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களும், தமிழில் இருந்து வெளியாகும் பெரிய படங்களும் முக்கிய படங்களாக இருப்பதால், இந்த முடிவை மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்து எடுத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியன் 2 தந்த பலத்த தோல்வியை தொடர்ந்து இந்தியன் 3 படத்தை வெளியிட உள்ள லைகா தயாரிப்பு நிறுவனமும் தக்லைப் படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. ஏனெனில் தக்லைப் படம் வெளியான பிறகு அந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக உள்ளது.
அதுமட்டுமின்றி இந்தியன் 2 படம் போல ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் மிகச் சிறந்த படமாக இந்தியன் 3 இருக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது.

அதற்காக இந்தியன் 3 படத்துக்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளில் சில திருத்தங்களும் மாற்றங்களும் செய்து இயக்குனர் ஷங்கர் அதற்கேற்ப படப்பிடிப்புகளையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறார். இதற்கு படத்தின் நாயகன் கமல்ஹாசனும் சம்மதம் தெரிவித்து இருப்பதால், புதிய காட்சிகள் படமாக்கப்பட்டு அவையும் சேர்க்கப்பட்ட பின்பே இந்தியன் 3 படம் ரிலீஸ் ஆகும். அதனால் அடுத்த ஆண்டில் மே மாதத்திற்கு பிறகு இந்தியன் 3 படத்தை எதிர்பார்க்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்