- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்கள் காதுகளில் முழம் முழமாக பூச்சுற்றிய கமல்ஹாசன், மணிரத்னம் - படம் எடுக்கறதுக்கு முன்னாடியே இப்படியா...

ரசிகர்கள் காதுகளில் முழம் முழமாக பூச்சுற்றிய கமல்ஹாசன், மணிரத்னம் – படம் எடுக்கறதுக்கு முன்னாடியே இப்படியா ரசிகர்களை ஏமாத்துவாங்க?

- Advertisement -

கடந்த 36 ஆண்டுகளுக்கு முன், 1987ம் ஆண்டில் வெளிவந்த படம் நாயகன். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், மும்பையில் வாழ்ந்த வேலு நாயக்கர் வாழ்க்கையை கமல்ஹாசன் தன் கேரக்டர் மூலம் வாழ்ந்து காட்டியிருந்தார். இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது. கமலுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.

மிக நீண்ட இடைவெளிக்கு பின், மீண்டும் இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் இணையும் படம்தான் தக்லைப். இந்த படத்தின் ஷூட்டிங், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட உள்ளது. பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் திரிஷா, அபிராமி, சித்தார்த் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.

இந்த தக்லைப் படத்தின் ஷூட்டிங் நடக்கும்போதே, எச் வினோத் இயக்கும் படப்பிடிப்பையும் துவங்க கமல்ஹாசன் கூறியுள்ளார். அதாவது மணிரத்னம் இயக்கத்தில் 15 நாட்கள், எச் வினோத் இயக்கத்தில் 10 நாட்கள், மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் 10 நாட்கள், எச் வினோத் இயக்கத்தில் 15 நாட்கள் என மாறி மாறி இரண்டு படங்களிலும் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 7ம் தேதி, கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு தக்லைப் படத்தின் டீசர் வெளியானது. இதில் சக்திவேல் ரங்கராஜ நாயக்கர் எனவும், காயல்பட்டணத்துக்காரன் எனவும் கமல் வசனம் பேசி, சிலரை தாக்குவது போன்ற அந்த டீசரில் காணப்பட்டது. கமல்ஹாசன் கோணிச்சாக்கை போத்தியது போன்ற ஒரு கெட்டப்பில் தாடி, மீசையுடன் காணப்பட்டார்.

இது 1800களில் நடந்த தக்ஸ் என்ற குற்றப்பரம்பரை சார்ந்த வீரர் ஒருவரின் கதை, அந்த காலகட்டத்தில் நடந்த கதையை பின்னணியாக கொண்டது என பலரும் பேசிக்கொண்ட நிலையில், இப்போதுதான் மிகப்பெரிய உண்மை வெளிவந்திருக்கிறது. அதாவது தக்லைப் எந்த காலத்தில் நடந்த கதையும் அல்ல. நாம் வாழும் சமகாலத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்ட அதிரடி ஆக்சன் படம்தான் என்று தெரிய வந்துள்ளது.

ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டுமே இப்படி ஒரு காட்சியை பிரமோவாக எடுத்துள்ளனர். தக்லைப் படத்தில் இப்படிப்பட்ட எந்த காட்சியுமே இருக்காதாம். முழுக்க முழுக்க பொய்யான ஒரு செட்டப்பாக இதை படமாக்கியுள்ளனர். அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் பிரமோவில் கமல், கறிவிருந்து போட்டு ஆரம்பிக்கலாங்களா? என கேட்பார். அப்படி ஒரு காட்சியே படத்தில் இருக்காது. அப்படித்தான், இதுவும் ரசிகர்களை ஏமாற்றும் வகையில், இப்படி ஒரு டுபாக்கூர் பிரமோவை வெளியிட்டு ரசிகர்களின் காதில் மணிரத்னமும், கமலும் டன் கணக்கில், முழம் முழுமாக பூவை சுற்றிய உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சற்று முன்