தமிழ் சினிமாவில் ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு என முன்னணி நட்சத்திர நடிகர்கள் படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் பி வாசு. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவர். கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற படத்தை இயக்கி அதே படத்தை தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கி 800 நாட்கள் படத்தை ஓட வைத்து சாதனை படைத்தவர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் பி வாசு கூறியதாவது, சிவாஜி ஐயாவிற்கு கதை சொல்லப் போனேன். அப்போது அவர் சாப்பிட உட்கார்ந்து இருந்தார். பன்னீர்புஷ்பங்கள் படம் இயக்கி முடித்தவுடன் அவருக்கு கதை சொல்ல போனேன். நான் அப்போது அவருக்கு படமே செய்யவில்லை. அவர் சாப்பாட்டில் உட்காந்திருந்தார். மதிய சாப்பாட்டு நேரத்திற்கு தான் என்னையும் வர சொல்லி இருந்தார்.
அவர் சாப்பிடும்போது எனக்கு மட்டும் தான் சாப்பாடு இருக்கிறது என்று அவர் சொன்னார். ஆனால் நான் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர், இது என் ஷூட்டிங். அதனால் எனக்கு மட்டும் தான் சாப்பாடு வந்தது. நீ போய் வெளியில் சாப்பிட்டு வா என்று சொன்னார். நான் எனக்கு சாப்பாடு வேண்டாம். கதை சொல்லிவிட்டு சாப்பிடுகிறேன் என்று சொன்னேன்.
அதன்பிறகு உட்கார்ந்தவர் சாப்பிட்டு முடிச்சுட்டார். ஒரு லுங்கி கட்டிக்கொண்டு ஒரு பனியன் போட்டுக்கொண்டு அழகாக உட்கார்ந்தார். அவர் உட்கார்ந்த உடனே அவரிடம் நான் கதை சொல்லப் போறேன். சொல்லும்போது டிவி வருகிறது. அதன்பிறகு நான் கதை சொல்ல தொடங்கும் போது அவர் டிவி பார்க்கிறார். அதில் கிரிக்கெட் மேட்ச் ஓடுகிறது, டிவி சவுண்ட் வந்ததால் என்னால் கதை சொல்ல முடியவில்லை.
ஆனாலும் முதல் சீன் என்று ஆரம்பிக்கும்போது அவர், என்னடா டிவி வேலை செய்யவில்லையா என்று கேட்டார். உடனே சிகரெட் எடுத்து கையில் வைத்து பற்ற வைத்தாா். நான் மன்னித்துவிடுங்கள் என்று சொன்னேன். அவர் எதற்கு என்று கேட்டார். நீங்க சிகரெட் பிடிக்கிறீங்க, டிவி பாக்குறீங்க, நான் கதை சொல்லும்போது உங்கள் கவனம் அங்கே போய்விடுகிறது. கதையில் இல்லை என்று சொன்னேன்.
அதை கேட்டு அவர் பயங்கரமான கோபத்தில், என்ன சொன்னே? யாரைப் பார்த்துக் கேட்கிறாய் இந்த கேள்வி? என்று என்னை கடுமையான திட்டினார் என்று இயக்குனர் பிவாசு அந்த நேர்காணலில் கூறியுள்ளார். இந்த இயக்குனர் பி வாசு தான் சிவாஜி கணேசன் மகன் பிரபுவுக்கு சின்னதம்பி என்ற மாஸ் ஹிட் படம் கொடுத்து அவரை வேற லெவலுக்கு தமிழ் சினிமாவில் கொண்டு சென்றார் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.





