- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபாஸின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததா சலார்... எப்படி இருக்கிறது திரைப்படம்... ரசிகர்கள் கூறுவது என்ன?...

பிரபாஸின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததா சலார்… எப்படி இருக்கிறது திரைப்படம்… ரசிகர்கள் கூறுவது என்ன?…

- Advertisement -

பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவிலும் புகழ்பெற்ற நடிகராக மாறினார் பிரபாஸ். அதற்கு முன்பு அவர் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தாலும், பாகுபலி திரைப்படம் அவரை வேறு எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத ஒரு இடத்தில் அமர வைத்தது. அந்தப் படத்தின் இரண்டு பாகங்களிலுமே பிரபாஸின் ஈடுபாடு மிக நேர்த்தியாக இருந்ததால், அவர் எங்கு சென்றாலும் அவரை பாகுபலி என்றே மக்கள் அழைத்தனர்.

அந்த அளவுக்கு ரசிகர் மனதில் அவர் நின்று வென்றார். ஆனால் இதற்கான இடத்தை பிரபாஸ் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும். தான் உலகளாவிய நடிகர் என்ற பெயரை எடுத்ததாலோ என்னவோ அடுத்து வரும் திரைப்படங்களிலும் பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பிய நடிகர், கதையில் கோட்டை விட்டார்.

- Advertisement -

இதற்கான பலனும் பிரபாஸிற்கு நன்றாகவே கிடைத்தது என்று சொல்லலாம். பாகுபலி திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் வெற்றி பெறவில்லை. 2017 ஆம் ஆண்டு பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி பெற, அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து சாகோ திரைப்படம் வெளியானது. அந்த நேரம் பாகுபலி வெற்றியின் தாக்கத்தால் அதற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் திரையரங்குகளில் அந்த எதிர்ப்பை சுக்கு நூறாக நொறுக்கியது சாஹோ. இதன் பின்னர் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படமும் வந்த தடம் தெரியாமல் மறைந்து போனது. காதல் திரைப்படத்திற்கு கோடி கோடியாய் செலவு செய்து எடுக்கப்பட, அதனை ரசிகர்கள் கொஞ்சம் கூட விரும்பவில்லை. இதன்பிறகு ஆதி புரூஸ் படத்தில் நடித்தார் பிரபாஸ். முந்தைய திரைப்படங்களின் தோல்வியை கொடுத்து வந்த அவர், இந்த திரைப்படத்தின் மூலம் சற்று கூடுதலாக கேலி கிண்டலுக்கு ஆளானார்.

- Advertisement -

அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தின் கதையோட்டம் இருந்தது. மேக்கிங் சுத்தமாக எடுபடாததால் ஆதி புரூஸ் ஆட்டத்தில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் தான் அவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்த சலார் திரைப்படத்தை பெரிதும் நம்பி இருந்தார். இதில் பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் என்பதால், சலார் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

இப்படியான சூழலில் ஹைதராபாத் தெலுங்கானா கர்நாடகா மாநிலங்களில் அதிகாலை ஒரு மணிக்கு படம் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த திரைப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். முதல் பாதி சுமாராக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சுத்தமாக எடுபடவில்லை என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். வழக்கமான கதையை மேக்கிங் தான் சற்று காப்பாற்றி இருப்பதாகவும், இடைவேளை காட்சி மற்றும் நிலக்கரி சுரங்கத்தில் நடக்கும் சண்டைக்காட்சி மிக நன்றாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் நாம் என்ன எதிர்பார்த்தோம் என்பதை காட்சி வழியாக கடத்த பிரசாந்த் நீல் தவற விட்டு விட்டார் என்றே பலரும் கூறி வருகின்றனர். அதேசமயம், படம் நன்றாக தான் இருப்பதாகவும், சண்டை காட்சிகள் அருமையாக உள்ளது என்றும் பிரபாஸ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்