- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனிமே என்னை பார்க்க வராதே என போண்டா மணியை வாசலோடு திருப்பிய அனுப்பிய விவேக் -...

இனிமே என்னை பார்க்க வராதே என போண்டா மணியை வாசலோடு திருப்பிய அனுப்பிய விவேக் – வடிவேலுவுக்கு பயந்துதான் அப்படி செய்தாரா?

- Advertisement -

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டவர். விவேக் நடிக்கும் படங்களில் காமெடி மட்டுமே இருக்காது. காமெடி காட்சிகளுடன் சமுதாயத்துக்கு தேவையான பல நல்ல கருத்துகளையும் அவர் சொல்லியதால், அவருக்கு சின்ன கலைவாணர் என்ற பட்டப் பெயர் கிடைத்தது.

ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, விஜய்,அஜீத், தனுஷ், சியான் விக்ரம் என தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த விவேக், நடிகர் கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்கவில்லை. 35 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் இருந்தும் அவருக்கு இது பெரிய குறையாக இருந்தது. ஆனால், இந்தியன் 2 படத்தில் கமலுடன் சில காட்சிகள் நடித்த நிலையில், அவர் மறைந்துவிட்டார்.

- Advertisement -

நடிகர் விவேக், தனது வாழ்வில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமை தனது வாழ்க்கையில் குருவாக ஏற்றுக்கொண்டவர். அதனால் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்தினார். தமிழ் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டினார். தனது சொந்த முயற்சியால் இந்த சமுதாய திட்டத்தை செயல்படுத்திய விவேக், எந்த இடத்தில் இதை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் போண்டா மணி நேற்று காலமானார். நடிகர் விவேக்குடன் சில படங்களில் போண்டாமணி சேர்ந்து நடித்திருக்கிறார். போண்டாமணி சிறந்த காமெடி நடிகர் என்றாலும், அவருக்கு போதிய வாய்ப்புகள் இல்லை. அப்போது நடிகர் போண்டாமணியை, வடிவேலுவுடன் சேர்த்து விட்டவரே நடிகர் விவேக்தான்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் நடிகர் விவேக்கை சந்திக்க அவரது வீட்டுக்கு போண்டாமணி சென்றிருக்கிறார். அப்போது வாசலில் வந்து அவரை சந்தித்த நடிகர் விவேக், இனிமேல் என்னை சந்திக்க இங்க வராதே. என்னைவிட இப்போது வடிவேலுதான் நிறைய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். என் படங்களில் நீ நடித்தால், நீ விவேக் ஆள் என்று சொல்லி, அவரது படங்களில் உன்னை நடிக்க விடமாட்டார். உன் நல்லதுக்கு சொல்றேன். அவருடன் இருந்து நடித்து பிழைத்துக்கொள் என்று கூறியிருக்கிறார்.

வடிவேலுவை பொருத்த வரை அவருக்கு ஜால்ரா அடிக்கிற ஆட்களை தான் தன்னுடன் வைத்துக்கொள்வார். அவர்களுக்கு தன் படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார். விவேக் தனது நண்பர் என்று கூறிக்கொண்டாலும் அவருடன் நடிக்கும் துணை நடிகர்களை தன்னுடன் சேர்த்துக்கொள்ள மாட்டார். அதனால், அந்த நடிகரின் வாழ்க்கைதான் வீணாகும் என்பதால்தான், வடிவேலுவுக்கு குணத்தை அறிந்து, போண்டா மணியை விவேக் தவிர்த்தார் என, ஒரு நேர்காணலில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்