- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 40 லட்சம் மோசடி செய்தாரா நடிகர் ராஜ்கிரண்? கோர்ட்டில் வழக்கு - பதில் மனுவில்...

ரூ. 40 லட்சம் மோசடி செய்தாரா நடிகர் ராஜ்கிரண்? கோர்ட்டில் வழக்கு – பதில் மனுவில் நடிகர் ராஜ்கிரண் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க!

- Advertisement -

மீஞ்சூரை சேர்ந்தவர் சரவணன். இவர் நடிகர் ராஜ்கிரணை வைத்து படம் தயாரிக்க 50 லட்சம் கொடுத்துள்ளார். அந்த படம் கைவிடப்பட்டதால் அந்த பணத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் மட்டுமே ராஜ்கிரண் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள 40 லட்சம் ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டார் என்று சரவணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நடிகர் ராஜ்கிரன் மனுதாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில் நடிகர் ராஜ்கிரண் கூறியிருப்பதாவது, என்னுடைய இயற்பெயர் முகைதீன் அப்துல் காதர். என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்த பிறகு எனது பெயர் திரைத்துறையில் ராஜ்கிரண் என்று மாறியது. திரைத்துறையில் பல ஆண்டுகளாக நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறேன்.

- Advertisement -

கடந்த 2022 ஏப்ரல் 10ம் தேதி மீஞ்சூரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் சரவணன் என்பவர் என்னை அணுகி திரைப்படம் தயாரிக்க உள்ளதாக தெரிவித்து எனக்கு 50 லட்சம் ரூபாய் முன்பணமாக தந்தார். ஆனால் படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கவில்லை. இதனால் 50 லட்சத்தை திருப்பி தருமாறு என்னிடம் கேட்டார். அதற்கு நான் கால அவகாசம் கோரினேன்.

இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் என் மீது அவர் புகார் அளித்தார். அங்கு நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் 10 லட்சம் ரூபாயை சரவணனுக்கு திருப்பிக் கொடுத்தேன். இந்த நிலையில் நான் அவரிடம் 40 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக என் மீது மீஞ்சூர் போலீசில் கடந்த 2025 செப்டம்பரில் சரவணன் புகார் கொடுத்துள்ளார்.

- Advertisement -

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் வழக்குப்பதிவு செய்யக்கோரி பொன்னேரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீது பொன்னேரி மாஜிஸ்திரேட் அளித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே படம் தயாரிப்பு தொடர்பாக 2022ல் ஒப்பந்தம் நடந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது திரைப்பட தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தம் மற்றும் சிவில் வழக்கு. இதற்கு கிரிமினல் சாயம் பூசப்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையே தொழில் ரீதியான ஒப்பந்த பிரச்சனை உரிய ஆவணங்களின் அடிப்படையில் தான் இது முடிவுக்கு வரும். தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர். எங்கும் தப்பி ஓடிவிட மாட்டேன். எனவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நடிகர் ராஜ்கிரண் அந்த பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

- Advertisement -

சற்று முன்