- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவுல மட்டும் ஜெயிலுக்கு போனா அது கிண்டலாக தான் இருக்கும், ஒரு நாள் உள்ள இருந்து...

சினிமாவுல மட்டும் ஜெயிலுக்கு போனா அது கிண்டலாக தான் இருக்கும், ஒரு நாள் உள்ள இருந்து பார்த்தா அப்போ தெரியும் – விஜய் சைகை குறித்து விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான் எம்ஜிஆர் ஜெயலலிதா கேப்டன் விஜயகாந்த் போன்றவர்கள். ஆனால் அவர்கள் எல்லாம் மேடைகளிலோ சட்டசபையிலோ நடித்து காட்டியது இல்லை. பஞ்ச் டயலாக் பேசியது இல்லை. ஆனால் முதல்வர் விஜய் மட்டும் முதல்வராகி 100 நாட்களை கடந்தும் இன்னும் அவர் நடிகராக இருந்து வருகிறார். முதல்வராக அவர் மாறவில்லை என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

குறிப்பாக ஒருமுறை சட்டசபையில் கழுத்துக்கு கீழே கையை குறுக்கில் காட்டி ஒரு சைகை செய்தார் விஜய். அதன்பிறகு நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் மிசா குறித்து பேசும் போது, தாடையில் கையில் தட்டியது போல் ஒரு சைகை காட்டி விஜய் பேசினார்.

- Advertisement -

அது பலருக்கும் புரியவில்லை. ஆனால் திமுகவினருக்கு தெளிவாக புரிந்தது. அதாவது எமர்ஜென்சி மிசா காலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட போது அவரை போலீசார் கடுமையாக தாக்கினர். அப்போது அவருக்கு தாடையில் அடிபட்டதை தான் விஜய் ஒரு வித நக்கலாக அப்படி சைகை செய்து காட்டி கிண்டலடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில உரிமைக்காக சிறை சென்று தாக்குதலுக்கு உள்ளான ஒருவரை இப்படி விஜய் கிண்டல் செய்திருக்கக் கூடாது என்று கண்டனங்கள் வலுத்து வருகின்றன. திமுகவினர் மட்டுமின்றி அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாளர்கள் பலரும் விஜயின் இந்த செய்கை அவர் வகிக்கும் மாண்புமிகு முதல்வர் பதவிக்கு அழகல்ல என்றும் விமர்சித்துள்ளனர்.

- Advertisement -

தவெக கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் இதை கண்டித்து இருக்கிறார். இந்த நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து முதல்வர் விஜயை அட்டாக் செய்திருக்கிறார்.

அதில் ப்ளூ சட்டை மாறன் கூறியிருப்பதாவது, இதுல தவடையில் கைவைத்து கிண்டல் பண்ண என்ன இருக்கு ப்ரோ? அதுவும் இவ்வளவு சத்தமா? சினிமாவுல மட்டும் ஜெயிலுக்கு போறவங்களுக்கு இது கிண்டலாக தான் இருக்கும். மக்களுக்காக போராடி ஒரு நாள் உள்ள இருந்து பார்த்தா தெரியும். ஸ்டாப் சச் சினிமாட்டிக் பிஹேவியர். வெரி சிரஞ்சி என்று அதில் ப்ளூ சட்டை மாறன் விஜய் குறித்து விமர்சித்து இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்