தங்கவயல் சுரங்கங்களில் பணிபுரியும் கொத்தடிமை தொழிலாளர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் கேஜிஎப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. பான் இந்தியா படமான இந்த படத்தின் அடுத்த பாகத்தை அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட 16 நாடுகளில் பெரிய பொருட்செலவில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கேஜிஎப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம்தான் சலார். இந்த படம் இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன் வெளியான சலார் படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே வெறுத்துப் போய்விட்டனர்.
ஏனெனில் பாகுபலி போன்ற மிகப்பெரிய பிரமாண்டமான வெற்றிப் படத்தின் கதாநாயகன் பிரபாஸ். அதே போல் மலையாளத்தில் மிகச்சிறந்த நடிகராக வலம் வருபவர் பிருத்விராஜ். இப்படி இரண்டு மிகப்பெரிய முக்கிய நடிகர்கள், ஜாம்பவான்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், இப்படி ஒரு சொதப்பலாக, மொக்கையாக இருக்கும் என்று ரசிகர்கள் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை.
கேஜிஎப் போன்ற படமாக சலார் இருக்காது. இது வேறுமாதிரியான ஒரு படம். இரண்டு நண்பர்களின் கதை என்று படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டதால், புதிய கதை, புதிய களம் என்ற எதிர்பார்ப்புடன் தியேட்டர்களுக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமும், விரக்தியும்தான் பிரசாந்த் நீல் தந்த பரிசாக இருந்தது.
இந்நிலையில், சலார் படம் எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் பிரசாந்த் நீல் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அப்போது, நான் இப்போது பேசுகிற விஷயத்தை தவறாக கருதி, எடிட் செய்து விடாதீர்கள். அப்படியே போடுங்கள் என்று கூறியவர், எப்போது நான் கதை எழுதினாலும் சரக்கு (மதுபானம்) அடித்துவிட்டு கதை எழுதவே துவங்குவேன் என பெருமையாக கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும், அதுதான் சலார் படம் நிதானமே இல்லாத ஒரு படமாக அப்படி இருக்கிறதா, கேஜிஎப் 1, 2 சாப்டர்களை பார்த்த டூகே கிட்ஸ் சலார் படத்தை பார்த்து, அய்யய்யோ இப்படி ஒரு படமா, என தெறித்து ஓடும் அளவுக்கு சலார் படம் இருப்பதற்கான காரணத்தை, அப்போதே டைரக்டர் அந்த வீடியோவில் தெளிவாக கூறி விட்டார் என, பங்கம் செய்து வருகின்றனர்.





