தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தை அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்தார். இந்த படமும் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
அதன்பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் எஸ்டிஆர் 51 படம் கமிட் ஆனது. இந்த படத்துக்கான கதையை ரெடி செய்ய 3 மாதங்கள் வரை அஸ்வத் மாரிமுத்து கால அவகாசம் கேட்டிருந்தார். சிம்புவும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமும் ஓகே சொல்லியிருந்தது.
ஆனால் அந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்துக்கு பிறகு ஜெயிலர் 2 படத்தில் நடித்து வந்த நிலையில் அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டுக் கொண்டு இருந்தார். அப்போது வெற்றிப் படங்களை தந்த இளம் இயக்குனர்களிடம் அவர் கதை கேட்ட நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் ரஜினியிடம் கதை சொல்ல நேரில் அழைக்கப்பட்டார்.
நடிகர் ரஜினிகாந்தை நான்கைந்து முறை அவரது வீட்டில் நேரில் சந்தித்து அஸ்வத் மாரிமுத்து கதை சொன்னார். ஆனால் கடைசியில் சிபி சக்ரவர்த்திக்கு ரஜினி ஓகே சொல்லி விட்டார். இதற்கிடையே ரஜினிக்கு கதை சொல்லும் ஆர்வத்தில் சிம்புவுக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணாமல் அஸ்வத் மாரிமுத்து கிடப்பில் போட்டு விட்டார்.
இதனால் பயங்கர கடுப்பான நடிகர் சிலம்பரசன், அஸ்வத் மாரிமுத்துவிடம் கோபமாக பேசியிருக்கிறார். விரைவில் கதையை ரெடி செய்யுங்க. மார்ச் மாதம் முடிவதற்குள் எனக்கு கதை ஸ்கிரிப்ட் தயாராக இருக்கணும். ஏப்ரல் மாதம் ஷூட்டிங் போகணும் என்று கண்டிஷனாக அஸ்வத்திடம் கூறியிருக்கிறார்.
சிம்புவின் கோபத்தை பார்த்து அரண்டுபோன அஸ்வத் மாரிமுத்து, எஸ்டிஆர் 51 படத்துக்கான கதையை இரண்டே நாட்களில் எழுதி முடித்திருக்கிறார். முழு படத்துக்கான ஸ்கிரிப்டையும் அவரே எழுதியிருக்கிறார். பிறகு சிம்புவை தொடர்பு கொண்ட அவர், முழு ஸ்கிரிப்ட் கதை ரெடியாக உள்ளது. நீங்க எப்ப சொன்னாலும் ஷூட்டிங் போகலாம் என்று அதிரடியாக கூறியிருக்கிறார். ஆச்சரியப்பட்ட நடிகர் சிம்பு, வரும் மே மாதம் ஷூட்டிங் போகலாம் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.





