- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை நித்யாமேனன் நடிக்க கமிட் ஆன அடுத்த படம், படத்தோட இயக்குனர் அவரா? சம்பளம் வாங்காமல்...

நடிகை நித்யாமேனன் நடிக்க கமிட் ஆன அடுத்த படம், படத்தோட இயக்குனர் அவரா? சம்பளம் வாங்காமல் நடிக்க கமிட் ஆன கதாநாயகி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதுமே மலையாள நடிகைகளுக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அம்பிகா ராதா ரேவதி ஊர்வசி துவங்கி இன்று இனியா கீர்த்தி சுரேஷ் நித்யாமேனன் வரை ஏராளமான மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகியாக வலம் வருகின்றனர். அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்துகின்றனர்.

அந்த வகையில் தமிழில் மெர்சல் சைக்கோ மாலினி 22 பாளையங்கோட்டை ஓ காதல் கண்மணி திருச்சிற்றம்பலம் தலைவன் தலைவி என பல படங்களில் நடித்தவர் நித்யாமேனன். நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகை தேசிய விருதும் பெற்றார்.

- Advertisement -

கடந்த ஆண்டில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நித்யாமேனன் நடித்த படம் தலைவன் தலைவி. இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிய பிளாக்பஸ்டர் படமாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்த படங்களில் நித்யாமேனன் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.

இந்த நிலையில் யாமிருக்க பயமே கவலை வேண்டாம் காட்டேரி கருங்காப்பியம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் டிகே இயக்கத்தில் ஒ புதிய படத்தில் நடிக்க நித்யாமேனன் கமிட் ஆகியுள்ளார். கதாநாயகியை மையப்படுத்திய இந்த கதையை கேட்டவுடன் நித்யாமேனன் ஓகே சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த 2014ம் ஆண்டில் வெளியான காமெடி திரில்லர் படமான யாமிருக்க பயமே படம் டிகே இயக்கத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. மற்ற சில படங்கள் அவரது இயக்கத்தில் சரியாக போகவில்லை. ஆனால் இந்த படம் பெரிய அளவில் பேசப்படும் ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் சிறிய தொகை ஒன்றை அட்வான்ஸ் ஆக பெற்றுக்கொண்ட நடிகை நித்யாமேனன் படம் வெளியான பிறகு ரெவின்யூ ஷேர் முறையில் சம்பளம் பெற்றுக்கொள்ளவும் ஒப்புதல் தந்துள்ளார். ஹீரோக்கள் பாணியில் நித்யா மேனன் போன்ற நாயகிகளும் ரெவின்யூ ஷேர் முறைக்கு மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்