நடிகர் விஜய் லியோ படத்தை தொடர்ந்து நடித்துவரும் படம் விஜய் 68. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இதில் விஜய் அப்பா, மகன் என 2 வேடங்களில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் பிறந்த நாளான வரும் ஜூன் 22ல் இந்த படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் இரண்டு ரோல்களில் நடிப்பதால் அப்பா கேரக்டரில் நடிக்கும் விஜய்க்கு நடிகை சிநேகாவும், மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரியும் நடிக்கின்றனர். பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மைக் மோகன், கஞ்சா கருப்பு, சுதீப், மாளவிகா ஷர்மா, விடிவி கணேஷ், பிரேம்ஜி, வைபவ், அஜ்மல் அஜய் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிப்பதாக தெரிய வந்துள்ளது.
சென்னை, ஐதராபாத், துருக்கி உள்ளிட்ட பலவிதமான லோகேஷன்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இப்போது தமிழ் சினிமாவில் முக்கிய திரைப்பட நகரமாக ஐதராபாத் விளங்குகிறது. அங்குள்ள பிலிம் சிட்டியில் ஏகப்பட்ட தமிழ் படங்களின் ஷூட்டிங் நடக்கிறது. விஜய் 68 படப்பிடிப்பும் அங்கு நடந்துள்ளது.
விஜய் படத்தை பொருத்த வரை, இது பான் இந்தியா படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு கோட் என பெயரிடப்பட்டதாக தகவல் பரவி வரும் நிலையில், வரும் 31ம் தேதி படத்தின் டைட்டிலை வெங்கட்பிரபு அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார். அடுத்த நாள் புத்தாண்டு தினத்தன்று படத்தின் செகன்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது.
இயக்குநர் வெங்கட்பிரபு படங்களை பொருத்தவரை, அதில் நடிக்கும் நட்சத்திர கூட்டம் மிக அதிகமாக இருக்கும். சுந்தர் சி படங்களை போலவே வெங்கட்பிரபு படங்களிலும் ஏகப்பட்ட நடிகர், நடிகையர் இருப்பர். அதுபோல் விஜய் 68 படத்திலும் நிறைய நட்சத்திர பட்டாளம் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனால் எப்போதும் வெங்கட்பிரபு படமும், படப்பிடிப்பு தளமும் திருவிழா கூட்டம் போலவே காணப்படுகிறது.
இந்நிலையில் நடிகை ரம்யாகிருஷ்ணன் விஜய் 68 படத்தில் நடிக்கிறார். இதை ரம்யாகிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ரம்யாகிருஷ்ணன் பாகுபலி, ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார். இந்த படத்தில் சீனியர் நடிகையான ரம்யாகிருஷ்ணன் இணைந்திருப்பது, படத்தின் லெவல் வேற லெவலில் இருக்கும் என விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.





