- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடிப்பில் ஜனநாயகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் எச் வினோத் இயக்கும் அடுத்த படம் -...

விஜய் நடிப்பில் ஜனநாயகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் எச் வினோத் இயக்கும் அடுத்த படம் – லேட்டஸ்ட் அப்டேட் தெரிஞ்சுக்கலாமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை தந்தவர் இயக்குனர் எச் வினோத். சதுரங்க வேட்டை நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு தீரன் அதிகாரம் 1 போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். இப்போது நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். வருகிற ஜனவரி 9ம் தேதி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது.

முன்னதாக வருகிற 27ம் தேதி மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே சில மாதங்களாக நடந்து வருகின்றன. நடிகர் விஜய் இசையமைப்பாளர் அனிருத் உட்பட படக்குழு சார்ந்த 250க்கும் மேற்பட்டோர் மலேசியாவில் நடக்கும் விழாவில் பங்கேற்ற உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு பிறகு இயக்குனர் எச் வினோத் இயக்கும் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தை எச் வினோத் டைரக்ட் செய்ய உள்ளார்.. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் தயாரிக்க உள்ளார்.

ஜனநாயகன் படத்துக்கு பிறகு இந்த படத்தின் பணிகளில் எச் வினோத் முழு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க் மற்றும் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளுக்காக தயாரிப்பு நிறுவனத்திடம் 3 மாதங்கள் வரை கால அவகாசம் கேட்டிருக்கிறார் எச் வினோத். இப்போது நடிகர் தனுஷ் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

அதன்பிறகு வருகிற 2026 ஏப்ரலில் லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க ஏற்கனவே கமிட் ஆகி உள்ளார். அதன்பிறகுதான் இயக்குனர் எச் வினோத் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

அதனால் வருகிற 2026ம் ஆண்டில் ஜூன் அல்லது ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஜனநாயகன் படமும் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஆதித்யா ராம் என்ற படப்பிடிப்பு தளத்தில் எச் வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்காக பிரமாண்ட செட்டுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அதற்கே 3 மாதங்கள் வரை கால அவகாசம் தேவைப்படும் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்