- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி அரசியலுக்கு வராதது குறித்து பேசிய அவரது மனைவி லதா ரஜினிகாந்த் - அவர் லேட்டஸ்ட்டாக...

ரஜினி அரசியலுக்கு வராதது குறித்து பேசிய அவரது மனைவி லதா ரஜினிகாந்த் – அவர் லேட்டஸ்ட்டாக சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று பாட்ஷா படம் வந்த போதே தமிழகத்தில் பேச ஆரம்பித்து விட்டனர். முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், ரஜினிகாந்திடம் இதுகுறித்து ரஜினியிடம் நேரடியாகவே பேசி இருக்கிறார். தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களான கருணாநிதி, ஜிகே மூப்பனாரும் ரஜினியை அரசியலுக்கு அழைத்தனர்.

ஆனால் சினிமாதான் என் வாழ்க்கை பயணம் என முடிவெடுத்த ரஜினி, தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். ஆனாலும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையும், ரசிகர்களின் கூக்குரலும் இன்று வரை தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

- Advertisement -

இதற்கிடையே பாபா படம் ரிலீசான காலகட்டத்தில், இந்த படம் வெற்றி பெற்றால் ரஜினி சினிமாவில் தொடர்வார். இல்லை என்றால், இமயமலை சென்றுவிடுவார் என்ற தகவலும் வைரலாக பரவியது. இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனாலும் ரஜினி தொடர்ந்து தனது படங்களில் நடித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சி தொடர்ந்த காலகட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதியும் மறைந்தார். அடுத்து எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் இருவர் மட்டுமே தமிழக அரசியலில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் தலைவர்களாக உருவெடுத்த நிலையில், தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது. சிஸ்டம் சரியில்லை என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் ரஜினி.

- Advertisement -

இதையடுத்து மீண்டும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த பரபரப்பு தொற்றிக்கொண்டது. மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து, ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 5 நாட்கள் வரை ஆலோசனை நடத்திய ரஜினி, அரசியலுக்கு வருகிறேன் என போக்கு காட்டிவிட்டு, அதன்பின்பு தமிழகத்தில் ரஜினிதான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று மக்கள் மத்தியில் புரட்சி ஏற்பட்டால் அரசியலுக்கு வருகிறேன் என பின்வாங்கி விட்டார். ஆனால் தமிழக மக்களுக்கு கொரோனா தொற்றுதான் பெரும் புரட்சியாக பரவியது.

அதன்பிறகு கபாலி, காலா, பேட்ட, அண்ணாத்த, ஜெயிலர், வேட்டையன் என பிஸியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், அவர் அரசியலுக்கு வராமல் போனது என்னை பொருத்தவரை மிக வருத்தமான விஷயம்தான். அவரை நான் தலைவராகவே பார்த்தேன். ஆனால் அவர் அரசியலுக்கு வராததற்கு நியாயமான காரணங்களும் உள்ளது. அவர் அரசியலுக்கு வராவிட்டாலும், மக்களுக்கு இப்போதும் நல்லது செய்துக்கொண்டுதான் இருக்கிறார், என்று கூறியிருக்கிறார் லதா ரஜினிகாந்த்.

- Advertisement -

சற்று முன்