நடிகர் விஜய் நடித்துவரும் படத்துக்கு விஜய் 68 என பெயர் வைக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களாக படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, துருக்கி, ஐதராபாத் என மாறி மாறி முக்கிய நகரங்களில் எடுக்கப்பட்டு வரும் இந்த படம், விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம், விஜய்க்கு வசூல் ரீதியாக பெரிய வெற்றியை தந்தாலும், விமர்சன ரீதியாக குப்பை என விமர்சிக்கப்பட்ட மிக மோசமான படம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் என்ற ஹாலிவுட் என்ற படத்தின் அப்பட்டமாக காப்பி இந்த படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் இடைவேளைக்கு பிறகு ரத்னக்குமார் பொறுப்பில் திரைக்கதை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் எப்போதோ பார்த்த ஒரு நான்கைந்து தெலுங்கு படங்களை ஒன்றாக கலந்து கட்டி லியோவின் மீதி கதையை உருவாக்கி, ரசிகர்களை விரக்தியின் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிட்டார்.
லியோ படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க சொன்னால் லோகேஷ் கனகராஜ், விஜய், சஞ்சய் தத், அர்ஜூன் போன்றவர்களே மீண்டும் ஒருமுறை இரண்டரை மணி நேரத்தை செலவளித்து, இப்படி ஒரு படத்தை பார்க்கவும் வேண்டுமா என யோசிக்கும் அளவுக்கு, வேற லெவலில் லியோ இருந்தது என்பது படம் பார்த்த பொதுவான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில், விஜய் நடித்து வரும் வெங்கட்பிரபு படத்துக்கு பாஸ் என்றும், பசில் என்றும் முதலில் டைட்டில் பெயர்கள் அடிபட்டன. கண்டிப்பாக படத்தின் டைட்டில் பாஸ் இல்லை என ஏஜிஎஸ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுதியாக தெரிவித்திருந்தார். ஆனால் படத்தின் பெயர் கோட் ( COAT) என்ற தகவல் பரவியது. ஆனால் இதை யாரும் மறுக்கவில்லை.
இப்போது படத்தின் டைட்டில் லீக் ஆகி விட்டதால் மாற்றி விடலாமா, என்ற ஆலோசனையில் விஜய், வெங்கட்பிரபு ஈடுபட்டுள்ளனர். ஆனால், கோட் என்பது உலக அளவில் ஒரு பெருமையான வார்த்தை என்பதால், மாற்ற வேண்டாம் எனவும் ஒரு தரப்பினர் கூறியிருக்கின்றனர். மேலும் கோட் என டைட்டில் செட்டிங், விஎப்எஸ் ஒர்க் என பல விஷயங்களை முடித்த நிலையில், இப்போது டைட்டில் மாற்றம் செய்வது சரியாக வருமா என பலத்த யோசனையில் இருந்து வருகின்றனர்.





