- Advertisement -
Homeபொழுதுபோக்குதியேட்டரில் கல்லா கட்டாத வா வாத்தியார் படம்… அதற்குள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறதா? -...

தியேட்டரில் கல்லா கட்டாத வா வாத்தியார் படம்… அதற்குள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறதா? – என்ன கொடும சார் இது… கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் கார்த்தி நடித்த படங்களில் பருத்தி வீரன் தீரன் அதிகாரம் 1 கொம்பன் நான் மகான் அல்ல சிறுத்தை அலெக்ஸ் பாண்டியன் தோழா போன்ற சில படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. காதல் காமெடி ஆக்சன் என எல்லாவிதமான கேரக்டர்களிலும் கார்த்தி தன்னை ஒரு நல்ல நடிகராக வெளிப்படுத்தினார்.

ஆனால் அவர் நடிப்பில் வெளியான 25வது படம் ஜப்பான் படம் மிக மோசமான தோல்வி படமாக இருந்தது. ஜோக்கர் குக்கூ போன்ற மிகச் சிறந்த படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கிய ஜப்பான் படம் அவ்வளவு மோசமான தோல்வி படமாக இருக்கும் என்று ரசிகர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

- Advertisement -

இதையடுத்து நடிகர் கார்த்தி நடித்த படம் வா வாத்தியார். சூது கவ்வும் காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கிய இந்த படத்தில் கார்த்தி கிர்த்தி ஷெட்டி ராஜ்கிரண் சத்யராஜ் என பலர் நடித்திருந்தனர். கடந்த டிசம்பர் மாதமே வெளியாக வேண்டிய வா வாத்தியார் படம் கோர்ட் வழக்கில் சிக்கி தவித்தது.

பிறகு ஒரு வழியாக போராடி கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வா வாத்தியார் படம் திரைக்கு வந்தது. மிகவும் ஆவலாக படம் பார்க்க சென்ற ரசிகர்களை தெறித்து ஓட வைத்து விட்டது இந்த படம். 10 ஜப்பான் படத்தை மொத்தமாக பார்த்த மாதிரி இருக்குது என்று ரசிகர்கள் கதறியபடி தியேட்டரை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டனர்.

- Advertisement -

இந்த சூழலில் வா வாத்தியார் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இதையடுத்து வா வாத்தியார் படம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு படம் திரைக்கு வந்து 4 வாரங்கள் கழிந்த பின்பே ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும். ஆனால் 2 வாரங்களிலேயே வா வாத்தியார் படம் ஓடிடிக்கு வருகிறது.

இந்த படம் கடந்த 14ம் தேதி ரிலீஸான நிலையில் 2 வாரங்களே ஆகியுள்ளது. இந்நிலையில் நாளை (28ம் தேதி) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் வா வாத்தியார் படத்தை தவிர்த்து விட்டு டிடிடி படம் பார்க்க சென்ற ரசிகர்கள். ஓடிடி தளத்திலாவது பார்ப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்