- Advertisement -
Homeபொழுதுபோக்குமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் சொல்ல வரும் நடிகர் விஜய் -...

மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் சொல்ல வரும் நடிகர் விஜய் – நிவாரண உதவிகள் வழங்கவும் நிர்வாகிகள் ஏற்பாடு

- Advertisement -

மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் மழைவெள்ளம், குடியிருப்புகளை சூழ்ந்து, பல பகுதிகள் வெள்ளக்காடுகளாக மாறியது. மழைவெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அரசு தரப்பில் பலவிதமான நிவாரண உதவிகள் செய்யப்பட்டன. வௌ்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டனர். பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

- Advertisement -

இதே போல் தமிழகத்தின் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரத்தில் இதே போல் கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பல தரப்பில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் நடிகர் விஜய் மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களை சந்திக்க நேரில் வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 2000 பேரை நேரில் வரவழைத்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தென்மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.

- Advertisement -

நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மஹாலில் நடக்கும் நிகழ்ச்சியில் நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக அங்கு நிவாரண பொருட்கள் கொண்டு வந்து வைக்கும் பணி இப்போது மும்முரமாக நடந்து வருகிறது. தவிர தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 27 வாகனங்களில் விழா நடக்கும் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

தென்மாவட்டங்களுக்கு நேரில் செல்லும் நடிகர் விஜய், முதலில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுறார். அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். தொடர்ந்து நெல்லையில் நடக்கும் நிகழ்ச்சியில் நிவாரண பொருட்களை வழங்கி, மக்கள் மத்தியில் பேசுகிறார். சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வந்து விஜய் அஞ்சலி செலுத்தியது வைரலானது. இப்போது தென்மாவட்டங்களுக்கு அவர் நேரில் செல்வதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்