- Advertisement -
Homeபொழுதுபோக்குபோஸ்டர் அடி... சென்சார் ரெடி... கொண்டாடி கொளுத்தனும்டி... லியோ பெயரை பயோவில் ஏற்றிய லோகேஷ் கனகராஜ்......

போஸ்டர் அடி… சென்சார் ரெடி… கொண்டாடி கொளுத்தனும்டி… லியோ பெயரை பயோவில் ஏற்றிய லோகேஷ் கனகராஜ்… ஆங்… பஞ்சாயத்து முடிஞ்சது போ போ…

- Advertisement -

விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாவதற்கு சரியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. ஏற்கனவே தளபதியுடன் மாஸ்டர் திரைப்படத்தை எடுத்து வெற்றிக்கொடி நாட்டிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக விஜயுடன் மீண்டும் இணைந்து இருப்பதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், நடன இயக்குனர் சாண்டி, அனுராக் காஷ்யப் என பலர் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோருக்கு மிரட்டலான ரோலை வைத்திருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

இதில் ஆண்டனி தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார். ஹரால்டு தாஸ் ஆக அர்ஜுன் வருகிறார். படத்தில் விஜய்க்கும் லியோ தாஸ் என்றுதான் பெயராம். இவர்கள் கூட்டணிக்கு தாஸ் பிரதர்ஸ் என பெயர் வைத்திருக்கும் லோகேஷ், சஞ்சய் தத்தின் மகனாக விஜய்யை காட்டுகிறாராம். இதே போல் சஞ்சய் தத்தின் தம்பியாக அர்ஜுன் வருகிறாராம்.

ஒரு கட்டத்தில் இந்த கூட்டணியில் இருந்து விஜய் விலக, அடுத்தடுத்து ஏற்படும் மாற்றங்கள்தான் படத்தின் அடிநாளம் எனக் கூறப்படுகிறது. இப்படி லியோ திரைப்படத்தைப் பற்றிய கதை ஒரு பக்கம் உலவி கொண்டிருந்தாலும், ரசிகர்கள் மனதில் உருத்திக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் லியோ திரைப்படம் எல் சி யூ வில் வருமா வராதா என்பதுதான்.

- Advertisement -

கிட்டத்தட்ட அதையும் யூகித்திருக்கும் சினிமா விமர்சகர்கள், லியோ திரைப்படம் கண்டிப்பாக எல் சி யு வில் தான் வரும் என்றும், விக்ரமில் வந்த சில முக்கிய கதாபாத்திரங்கள் இதில் நடித்திருப்பதாகவும் ஆருடம் கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க படப்பிடிப்பின் போது விஜய் லோகேஷ் கனகராஜ் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் படத்தை விட்டு விலகியதால் ரத்தினகுமார் தான் மீதி திரைப்படத்தை எடுத்ததாகவும் ஒரு வதந்தி பரவியது.

இதற்கு பதில் கூறாமல் மௌனம் காத்த லோகேஷ், தனது எக்ஸ் வலைதள பதிவில் மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய நான்கு திரைப்படங்களும் இடம் பெற்றிருக்க, லியோவை பற்றி மட்டும் ஏற்றாமல் இருந்தார். இதனால் பதறிப் போன ரசிகர்கள், ஒருவேளை அந்த தகவல் உண்மை தானோ என்று கேள்வி எழுப்பி வந்தனர். நாளை படத்தின் டிரைலர் வெளியாக இருக்கும் இந்த வேளையில், தனது பயோவில் லியோ படத்தையும் சேர்த்து வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதைப் பார்த்து ஆனந்தம் அடைந்த விஜய் ரசிகர்கள், கொண்டாடி வருகின்றனர்.

மேலும் அவர்களின் உற்சாகத்தை கூட்டும் வகையில், லியோ படத்தின் தணிக்கை குழு சான்றிதழும் வெளியாகி இருக்கிறது. படத்தில் எந்த சீனையும் கட் செய்யாத தணிக்கை குழுவினர், யுஏ சான்றிதழை வழங்கி உள்ளனர். அதுமட்டுமில்ல படம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடுகிறதாம். இப்படி அடுத்தடுத்த தகவல் வெளியாகி கொண்டிருக்க, வரும் 19ஆம் தேதி படம் வெளியாவதால் முன்பதிவுக்கான வேலையில் திரையரங்கு உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்