- Advertisement -
Homeபொழுதுபோக்குதக் லைப் படத்தின் புதிய அப்டேட் வந்தாச்சு... முழு வீச்சில் இறங்கப் போகும் உலகநாயகன்...

தக் லைப் படத்தின் புதிய அப்டேட் வந்தாச்சு… முழு வீச்சில் இறங்கப் போகும் உலகநாயகன்…

- Advertisement -

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு, கடந்த ஆண்டு எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. அவர் எந்த ஒரு படத்தின் சூட்டிங்கிலும் கலந்து கொள்ளவில்லை என்றே கூறலாம். விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு உற்சாகமடைந்த அவர், திரைப்படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்படி சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் மற்றும் சிம்புவுடன் ஒரு படம் என இரண்டு திரைப்படங்கள் கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டன.

இதில் சிவகார்த்திகேயன் உடனான திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி முடிந்து விட்டது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த திரைப்படம், ஆக்சன் படமாக எடுக்கப்படுகிறதாம். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். காஷ்மீர், சென்னை பகுதிகளில் இதன் சூட்டிங் நடத்தப்பட்டது. சிம்புவை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டாலும், அதன் பணிகள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது.

- Advertisement -

வரலாற்று பின்னணியில் எடுக்கப்படுவதால், அதிக நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. இது போக விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் எல்ஐசி படத்தை கமல்தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அதற்கான அறிவிப்பில் மாற்றம் ஏற்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க, எச். வினோத்துடன் கை கோர்த்தார் கமல்ஹாசன். இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பும் வெளியானது. இதன் கதை ஏற்கனவே கமல் கையில் எடுத்த, தலைவன் இருக்கிறான் படத்தின் ஸ்டோரிதான் என்றும், தற்போது அதற்கு வினோத் கதை மட்டும் எழுதுவதாகவும் கூறப்பட்டது. இதேபோல் மணிரத்னம் உடனும் கமல்ஹாசன் இணைந்தார்.

- Advertisement -

மணிரத்னம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. தக் லைப் என இதற்கு பெயர் வைக்கப்பட்டது. இதில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கான அறிவிப்பு வீடியோவில் கமல்ஹாசன், ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. அதேசமயம் கமல்ஹாசனின் வசனங்கள் கவனம் ஈர்த்தன.

இந்த நிலையில் முதலில் மணிரத்னம் படத்தை முடித்த பிறகு அவர் வினோத்துடன் இணைய இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. அதன்படி தக் லைப் படத்தின் படப்பிடிப்பு, இந்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறதாம். முதலில் சென்னையில் வைத்து சூட்டிங்கை எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

சற்று முன்