- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 6ம் தேதி சென்னையில் கலைஞர் 100 விழா, ஆதரவு தராமல் ஒதுங்கிக்கொண்ட நடிகர் சங்கம்...

வரும் 6ம் தேதி சென்னையில் கலைஞர் 100 விழா, ஆதரவு தராமல் ஒதுங்கிக்கொண்ட நடிகர் சங்கம் – ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அல்வா கொடுத்த நடிகர், நடிகையர்

- Advertisement -

திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்தை முதலமைச்சராக பல ஆண்டுகள் ஆட்சி செய்தவர். இப்போதும் தமிழகத்தில் அவரது மகன் ஸ்டாலின் தலைமையில், திமுக ஆட்சிதான் நடந்து வருகிறது. கருணாநிதி, கட்சி தலைவராக மட்டுமின்றி சினிமாவிலும் கதை வசனகர்த்தாவாக பணி செய்தவர்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த மருதநாட்டு இளவரசி, சதிலீலாவதி போன்ற படங்களின் கதை வசனகர்த்தாவாக பணிபுரிந்தவர் கருணாநிதி தான். முதுமையான காலகட்டத்தில் பல படங்களுக்கு கதைவசனம் எழுதியவர் கருணாநிதி. சினிமா மீதும், சினிமா கலைஞர்கள் மீதும் எப்போதும் அபரிமிதமான அன்பும், அக்கறையும் கொண்டவர் கருணாநிதி.

- Advertisement -

நடப்பாண்டில் கருணாநிதியின் 100வது ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில், இந்தாண்டு முழுவதும் திமுக பொதுக்கூட்டங்கள், சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்து வருகிறது. இதையொட்டி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் கலைஞர் 100 என்ற விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி, சேப்பாக்கம் மைதானத்தில் இந்த விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழை, மழைவெள்ள பாதிப்புகளை தொடர்ந்து அந்த விழா வருகிற ஜனவரி 6ம் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இப்போது விழா ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில், விழாவில் முக்கிய நிகழ்வுகளுக்கு இடையே தமிழ் சினிமா நடிகர், நடிகையர் பங்கேற்கும் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யபபட்டுள்ளது. இதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் நடிகர் நடிகைகளை அணுகினால், அவர்கள் கண்டுக்கொள்ளாமல் தவிர்த்து அலட்சியப்படுத்துகின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகளான பொருளாளர் கார்த்தி, செயலாளர் விஷால் போன்றவர்களும் இப்போது வெளிநாடுகளில் உள்ளனர். சங்கத் தலைவர் நாசர் வடமாநிலம் சென்றுள்ளார். அவர்கள் தரப்பிலும் போதிய ரெஸ்பான்ஸ் இல்லை. அதர்வா, வைபவ் போன்ற வளரும் கலைஞர்கள் கூட இதற்கு ஒத்துழைக்கவில்லை. சில கலைஞர்கள், வெளிநாட்டு கலைநிகழ்ச்சி போல, தொகை கொடுத்தால் ஆட வருகிறோம் என்று சொல்லி வெறுப்பேற்றி வருகின்றனர். இதனால் தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம் நொந்து போயுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்