- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர்ந்து 4 படங்களில் நடித்தும் படுதோல்வியை சந்தித்த நடிகர் சண்முக பாண்டியன் - அடுத்து என்ன...

தொடர்ந்து 4 படங்களில் நடித்தும் படுதோல்வியை சந்தித்த நடிகர் சண்முக பாண்டியன் – அடுத்து என்ன செய்யப் போகிறார்? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றவர் நடிகர் விஜயகாந்த். காதல் குடும்பம் சென்டிமென்ட் ஆக்சன் காமெடி என எந்த மாதிரியான காட்சிகளிலும் சிறப்பான தனது அழுத்தமான நடிப்பை விஜயகாந்த் தந்து விடுவார். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, பெண்கள் என அனைத்து தரப்பினரையும் தனது பண்பட்ட நடிப்பால் கவர்ந்தவர் விஜயகாந்த்.

குறிப்பாக கடந்த 1980 – 90களில் அவர் நடித்த பல படங்கள் வெள்ளிவிழா படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. அந்த காலகட்டத்தில் அவர் ரஜினிகாந்த் கமல்ஹாசனுக்கு அடுத்த நிலையில் நட்சத்திர நடிகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். ஆனால் கடைசி வரை தமிழ் மொழியில் மட்டுமே நடித்தவர் என்ற சிறப்புக்குரியவர்.

- Advertisement -

தனது அப்பாவை போலவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசையில் நடிக்க வந்தவர்தான் நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். அவர் தனது அம்மா பிரேமலதா மாமா எல்கே சுதீஷ் மற்றும் அண்ணன் விஜயபிரபாகரன் போல தங்களது தேமுதிக கட்சியில் ஆர்வம் காட்டால் சினிமாவுக்குள் வந்துவிட்டார்.

சண்முக பாண்டியன் முதலில் சகாப்தம் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து அவர் மதுரவீரன் படை தலைவன் கொம்பு சீவி என இதுவரை 4 படங்களில் அடுத்தடுத்து நடித்து விட்டார். ஆனால் 4 படங்களில் நடித்தும் இன்னும் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அடையாளம் ரசிகர்கள் மத்தியில் கிடைக்காமல் பலத்த ஏமாற்றத்தில் உள்ளார்.

- Advertisement -

கேப்டன் மகன் என்ற அடையாளம் மட்டுமே அவருக்கு பிரதானமாக இன்னும் இருக்கிறது. ஒரு நல்ல நடிகராக தமிழ் சினிமாவில் அவருக்கு ஒரு பெயர் கிடைக்கவில்லை. அந்த அடையாளம் இருந்தால் மட்டுமே அவரால் அடுத்தடுத்த படங்களில் நடித்து சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக மாற முடியும். அதனால் அவர் இப்போது முக்கியமான முடிவுக்கு வந்திருக்கிறார்.

அதனால் இனிமேல் ஆக்சன் கதைகளை கொண்ட படங்களில் மட்டுமே நடிக்காமல் நல்ல கதையம்சம் கொண்ட கேரக்டர் ரோல்களில் நடிக்க சண்முகபாண்டியன் முடிவு செய்திருக்கிறார். மேலும் புதுமுக இயக்குனர்களில் படங்களில் நடிக்காமல் வெள்ளிவிழா படங்களை கொடுத்த பிரபல இயக்குனர்களிடம் கதை கேட்கவும் சண்முகபாண்டியன் தயாராக உள்ளார். அடுத்து இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அவர் நடிக்கிறார்.

- Advertisement -

சற்று முன்