- Advertisement -
Homeபொழுதுபோக்குடைரக்டர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா கொடுத்த பிரஸ்மீட்டால் வந்தது வில்லங்கம் - கோர்ட்டுக்கு...

டைரக்டர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா கொடுத்த பிரஸ்மீட்டால் வந்தது வில்லங்கம் – கோர்ட்டுக்கு போக தயாரான அவரது மாஜி மனைவி

- Advertisement -

சிறுத்தை படம் மூலம் தமிழ் சினிமாவில் பரிச்சயமானவர் சிவா. அன்று முதல் சிறுத்தை சிவா என்று அழைக்கப்படுகிறார். வீரம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற படங்களை இயக்கிய சிறுத்தை சிவாவின் அடுத்த படம் கங்குவா, விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

சிறுத்தை சிவாவின் தம்பி பாலா. இவர் தமிழில் அன்பு என்ற படத்தில் அறிமுகமானார். இதில் வடிவேலுவின் ஓட்டு நமக்குதான் போடறாங்க, ஆனா ஓட்டு போட்ட சீட்டை எல்லாம் வீட்டுக்கு எடுத்துட்டு போறாங்க, என்ற காமெடி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

- Advertisement -

வீரம் படத்தில் அஜீத்குமாருக்கு 4 தம்பிகளில் ஒருவராக பாலா நடித்திருந்தார். அண்ணாத்த படத்தில், வில்லனின் தம்பியாக நடித்திருப்பார். தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்த பாலா, மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இப்போதும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கல்லீரல் பாதிப்பு காரணமாக, திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் உயிர்பிழைத்து வந்திருக்கிறார். தனது முதல் மனைவியை பிரிந்த பாலா 2வது திருமணம் செய்திருக்கிறார். அவருக்கும், முதல் மனைவிக்கும் பிறந்த மகள் இருக்கிறார்.

- Advertisement -

கடந்த டிசம்பர் மாதத்தில் கடந்த பிறந்தநாளையொட்டி, நடிகர் பாலா பிரஸ்மீட் வைத்தார். அப்போது தனது முன்னாள் மனைவி அம்ருதா சுரேஷ் குறித்த பேசிய பாலா, அந்த 3 பேர் இருந்த அந்த காட்சியை நான் பார்த்தேன். என் மகளின் எதிர்காலம் கருதி அதைப்பற்றி என்னால் பேச முடியவில்லை. எனக்கு மகளுக்கு பதில், மகன் பிறந்திருந்தால் அந்த 3 பேரையும் சும்மா விட்டிருக்க மாட்டேன், என்றார். மேலும், என் மகளை பார்க்க கூட என் முன்னாள் மனைவி என்னிடம் பணம் கேட்கிறார். பார்ப்பதற்கு அனுமதி மறுக்கிறார் என்றும் கூறியிருந்தார்.

இது இப்போது புது விவகாரமாக மாறியிருக்கிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாலாவின் மாஜி மனைவி அம்ருதா சுரேஷ், விவாகாரத்துக்கு பிறகு, ஒருவரை ஒருவர் விமர்சித்து பர்சனலாக பேசக்கூடாது என்று போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை பாலா மீறிவிட்டார். அதனால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறேன். தன் மகளை பார்க்க, நான் அனுமதிக்கவில்லை என்று பாலா கூறுவதும் உண்மை இல்லை, என அம்ருதா சுரேஷ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்