- Advertisement -
Homeபொழுதுபோக்குகேங்ஸ்டர் படங்களுக்கு ஹெட்மாஸ்டர் அந்த படம்தான், கார்த்திக் சுப்பராஜ் லோகேஷ் கனகராஜ் எடுப்பதெல்லாம் ஏஐ செயற்கை...

கேங்ஸ்டர் படங்களுக்கு ஹெட்மாஸ்டர் அந்த படம்தான், கார்த்திக் சுப்பராஜ் லோகேஷ் கனகராஜ் எடுப்பதெல்லாம் ஏஐ செயற்கை படங்கள் – விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாகவே கேங்ஸ்டர் படங்கள் அதிகரித்து விட்டன. அதுவும் கமர்ஷியல் இயக்குனர்களான கார்த்திக் சுப்பராஜ் லோகேஷ் கனகராஜ் அட்லி நெல்சன் திலீப்குமார் போன்றவர்கள் இதுபோன்ற கேங்ஸ்டர் படங்களையே இயக்கி வருகின்றனர். அதிரடி சண்டை காட்சிகளாக படம் முழுவதும் வன்முறை களமாகவே இந்த படங்கள் இருக்கின்றன.

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர். குறிப்பாக காதல் கொண்டேன் 7ஜி ரெயின்போ காலனி ஆயிரத்தில் ஒருவன் புதுப்பேட்டை நானே வருவேன் இரண்டாம் உலகம் மயக்கம் என்ன என்ஜிகே என பல படங்களில் சில படங்கள் தவிர மற்ற படங்கள் எல்லாமே மாபெரும் வெற்றிப் படங்களாக இருந்தன.

- Advertisement -

இதில் கேங்ஸ்டர் திரைக்களத்தில் உருவான படம்தான் புதுப்பேட்டை. கடந்த 2006ம் ஆண்டில் இந்த படம் வெளிவந்தது. தனுஷ் சினேகா சோனியா அகர்வால் பாலாசிங் அழகம் பெருமாள் மூணார் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இதில் துணை நடிகராக ஓரிரு காட்சிகளில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்திருப்பார்.

இரண்டு குரூப் கேங்ஸ்டர் சண்டையில் கூலிப்படை தலைவனாக உள்ள தனுஷ் சந்திக்கும் பிரச்னைகள்தான் இந்த படம். சினேகா இதில் விலைமாது கேரக்டரில் நடித்திருந்தார். சோனியா அகர்வால் தனுஷின் மனைவியாக நடித்திருந்தார். ஒரு சாதாரண ஏழை வீட்டு பையன் எப்படி படிப்படியாக கூலிப்படை தலைவனாக மாறுகிறான், கடைசியில் அவன் நிலை என்ன என்பதை மிக யதார்த்தமான கதைக்களத்தில் சொன்ன படம்தான் புதுப்பேட்டை.

- Advertisement -

இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியிருப்பதாவது, கேங்ஸ்டர் படங்களின் ஹெட் மாஸ்டர் புதுப்பேட்டை படம்தான். செல்வராகவனின் சிறந்த படைப்பு. தனுஷின் விஸ்வரூப நடிப்பு. அரசியல் ஆதாயத்திற்காக கூலிப்படையை பயன்படுத்துவோரின் வாழ்க்கையை வெகு இயல்பாக சித்தரித்த படைப்பு.

இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ் லோகேஷ் கனகராஜ் போன்றோர் எடுப்பதெல்லாம் செயற்கையான கேங்ஸ்டர்ஸ் படங்கள். அதாவது ஏஐ படங்கள். இதன்பிறகு வந்த பல கேங்ஸ்டர் அரசியல் படங்கள் இந்த உச்சத்தை தொட இயலவில்லை. செல்வராகவனே நினைத்தாலும் இப்படி ஒரு படத்தை சத்தியமாக இனி எடுக்க முடியாது என பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்