துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர். இதனை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
இவ்வளவு அப்டேட்டுகள் இருந்தும், தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து படத்தின் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. விடாமுயற்சி என டைட்டில் மட்டும் மே மாதம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பையும் அந்த நிறுவனம் வெளியிடாமல் உள்ளது. அதேபோல் அஜித் ரசிகர்களும் முன்பு போல் அப்டேட் கேட்பதும் இல்லை.
வலிமை திரைப்படத்தின் மூலம் தாங்கள் பட்டப்பாடு போதும் என்று அவர்களும் அமைதி காத்து வருகின்றனர். இதனால் விடாமுயற்சி படத்தின் பணிகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. தொடர்ந்து மூன்று மாதங்களாக அங்கு மட்டுமே சூட்டிங் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்புகள் அங்கு தான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் சூட்டிங்கிற்கு முன்பாகவே, பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டினார் அஜித். துணிவு திரைப்படம் வெளியானதும், வெளிநாடுகளுக்கு அவர் பைக் டூர் செல்ல ஆரம்பித்தார். ஒவ்வொரு ஊரிலும் அஜித் செல்ல, அங்கிருந்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகின. அவரும் பைக் ரேசுக்கான ஈவென்ட் ஒன்றையும் ஆரம்பித்தார். ஆனால் அது எந்த கதியில் உள்ளது என்றே இப்போது தெரியவில்லை.
இது ஒரு பக்கம் இருக்க, புத்தாண்டு விடுமுறைக்காக விடாமுயற்சி படப்பிடிப்பிற்கு விடுமுறை விட்டு அஜித் குமார், தங்கள் குடும்பத்தினருடன் துபாய் சென்றார். அங்கு மகளின் பிறந்தநாளை கொண்டாடிய அஜித்குமார், கப்பலில் பயணம், ஓட்டலில் நடனம் என உற்சாகமாக விடுமுறையை கழித்தார். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வராமல், இப்படி அஜித் நடந்து கொள்ளலாமா? பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டு இப்படி செய்வது சரியா என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதனிடையே துபாயில் அஜித்தை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித், அந்த நபரிடம் இருந்து செல்போனை வாங்கி வீடியோவை டெலிட் செய்தார். ஏற்கனவே இதற்கு முன்பு, தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்ற போது, தன்னை வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை அவர் ஆவேசமாக பிடுங்கினார். அங்கிருந்து செல்லும் போது தான் ரசிகரிடம் வழங்கினார். இப்படியான சூழலில் தற்போது மீண்டும் அஜித் பொதுவெளியில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டது அவரது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.





