- Advertisement -
Homeபொழுதுபோக்குசுடச்சுட ஆரம்பித்த பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்பட சூட்டிங்... டைரக்டர் இந்த பிரபலத்தின் உதவி இயக்குனரா......

சுடச்சுட ஆரம்பித்த பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்பட சூட்டிங்… டைரக்டர் இந்த பிரபலத்தின் உதவி இயக்குனரா… போடு, சக்க…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகி பிறகு நடிகராக அவதாரம் எடுத்தவர்கள் பலர் உண்டு. உதாரணத்திற்கு நாம் எஸ் ஜே சூர்யாவை கூறலாம். வாலி, குஷி, நியூ என அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை கொடுத்த எஸ் ஜே சூர்யா, பிறகு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தற்போது, முக்கிய திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். இப்படியான சூழலில் எஸ்.ஜே சூர்யாவின் பாதையைப் பின்பற்றி, சொல்லப் போனால் ஒரு படி மேலே சென்று கதாநாயகன் அவதாரம் எடுத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். கோமாளி திரைப்படத்தின் மூலம் தான் அவர் இயக்குனராக அறிமுகமானார். ரவி மோகன் ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.

- Advertisement -

90ஸ் கிட்ஸ்களின் தற்போதைய மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் இதன் கதையை எழுதி காமெடியில் கலக்கி இருந்தார் பிரதீப் ரங்கநாதன். இதனைத் தொடர்ந்து லவ் டுடே திரைப்படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார் பிரதீப். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்தது.

நவீன யுகத்தில் பலரும் செல்போனில் மூழ்கி கிடக்க, காதலர்கள் தங்களுக்குள் அலைபேசியை மாற்றிக் கொண்டால் என்னென்ன விளைவெல்லாம் ஏற்படுகிறது என்பதைத் தான் இந்த திரைப்படம் காட்டியிருந்தது. இப்படி ஒரே திரைப்படத்தின் மூலம், வெற்றியின் உச்சிக்கு சென்ற பிரதீப் அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்தார்.

- Advertisement -

டிராகனாக இந்த திரைப்படம் உருவாக, தற்போது வரை திரையரங்குகளில் வசூல் மழை பெய்து வருகிறது. 37 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி இருக்கிறது. இதனால் பலரும் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறிப் போயிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சுதா கொங்கராவின் உதவியாளர் கீர்த்தீஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்க, மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மமீதா பைஜு படத்தில் கதாநாயகியாக வருகிறார். சரத்குமாருக்கும் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாய் அபயங்கார் இசையமைக்கும் சூழலில், படத்தின் பூஜை தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்