- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி திரைப்படங்களை தயாரிக்கப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறாரா கமல்?... அப்போ சிம்பு படம் என்ன ஆனது?......

இனி திரைப்படங்களை தயாரிக்கப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறாரா கமல்?… அப்போ சிம்பு படம் என்ன ஆனது?… பின்னணி என்ன…

- Advertisement -

1980 களிலேயே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கிய கமலஹாசன், அதன் மூலம் தான் நடிக்கும் படத்தை தயாரித்து வந்தார். சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், விருமாண்டி என கமலின் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான திரைப்படங்கள் அனைத்துமே ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் பேனரிலேயே உருவானது.

எப்போதாவது பிற நடிகர்கள் திரைப்படத்தை தயாரிக்கும் கமல்ஹாசன், 2019 ஆம் ஆண்டு கடாரம் கொண்டான் திரைப்படத்தை தயாரித்தார். இதில் கதாநாயகனாக விக்ரம் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படியான சூழலில் ராஜ்கமல் தயாரிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

- Advertisement -

கமலின் திரையுலக வாழ்க்கையில், கடந்த 20 ஆண்டுகளாக கொடுக்காத வெற்றியை விக்ரம் கொடுத்ததால் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானார். விக்ரம் திரைப்படம் கொடுத்த உத்வேகத்தால், அடுத்தடுத்த திரைப்படங்களை தயாரிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டி வந்தார். குறிப்பாக சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இணையும் திரைப்படம் கமலின் பேனரிலேயே உருவாவதாக அறிவிக்கப்பட்டது.

இதுபோக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தையும் கமல் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் விக்னேஷ் சிவன் பிரதிப் ரங்கநாதன் திரைப்படம், புதுமுக இயக்குனருடன் நயன்தாரா இணையும் படம், கிடாரி பட இயக்குனருடன் ஒரு படம் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி இருந்தன.

- Advertisement -

இப்படியான சூழலில் தான், தயாரிப்பில் இருந்து வெளிவருவதாக கமல்ஹாசன் முடிவெடுத்து இருக்கிறார். பொருளாதார சிக்கலை இதற்கு மிகப்பெரிய பிரச்சனை என்று கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் திரைப்படம் தொடங்கி விட்ட சூழலில், அதற்கு சோனி நிறுவனம் முதலீடு செய்திருப்பதால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படம் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற திரைப்படங்களை தயாரிப்பதில் போதிய நிதி இல்லையாம்.

இதற்காகத்தான் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் திரைப்படம் வேறு ஒரு நிறுவனத்திற்கு போய் சேர்ந்தது. அதாவது வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து முதலீடுகளை பெறுவதன் மூலம் படத்தை தயாரிக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தாராம் கமலஹாசன். இதுகுறித்து ராஜ்கமல் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பாளர் மகேந்திரன் யோசனை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தத் திட்டத்தில் கமல்ஹாசன் இறங்க கடைசி அது நடைபெறாமல் போனதாக தெரிகிறது. இப்படியான சூழலில் சிம்பு திரைப்படமும் வேறொரு நிறுவனத்திற்கு கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நிர்வாக பொறுப்பாளர் பதவியில் இருந்து மகேந்திரனை நீக்கிவிட்டு சுகாசினியை அதில் சேர்த்துக் கொள்ள கமல் முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்