- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் ரீ மேக் செய்யப்படும் ஆடிவெள்ளி படம்… இந்த முறை கதாநாயகி சீதா இல்லே -...

மீண்டும் ரீ மேக் செய்யப்படும் ஆடிவெள்ளி படம்… இந்த முறை கதாநாயகி சீதா இல்லே – அட இந்த மாஸ் ஹீரோயினா? போட்றா வெடிய!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்கள் பக்தி படங்களாக வந்து பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கின்றன. அதுவும் கடந்த 1980 – 90களில் தமிழில் பல படங்கள் பக்தி படங்களாக வந்து மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்திருக்கின்றன. கடந்த 1990ம் ஆண்டில் நிழல்கள் ரவி சீதா நடிப்பில் வெளியான படம் ஆடி வெள்ளி. இந்த படத்தில் பாம்பு யானை போன்ற விலங்குகளும் நடித்திருந்தன.

நடிகை சீதா கடந்த 1990களில் முன்னணி நடிகையாக இருந்தார். நடிகர் பாண்டியராஜன் இயக்கத்தில் ஆண்பாவம் படத்தில் அறிமுகமான சீதா தொடர்ந்து குரு சிஷ்யன் உன்னால் முடியும் தம்பி புதிய பாதை படிச்சபுள்ள மனசுக்கேத்த மகாராசா பெண்மணி அவர் கண்மணி ராஜநடை சங்கர் குரு மருதுபாண்டி மல்லு வேட்டி மைனர் என பல படங்களில் நடித்து பிரபல நாயகியாக இருந்தார்.

- Advertisement -

சீதாவுக்கு பெரிய இமேஜை கொடுத்த ஆடிவெள்ளி படத்தை டைரக்டர் இராம நாராயணன் டைரக்ட் செய்து இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை டைரக்டர் இராம நாராயணன் மகன் தயாரிப்பாளர் முரளி ராமசாமி ரீமேக் செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஆடிவெள்ளி படத்தில் சீதா கேரக்டரில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் அதிக சம்பளம் கேட்டதாலும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் அவர் பிஸியாக நடித்து வருவதாலும் ஆடி வெள்ளி படத்தில் நயன்தாரா நடிப்பது கேள்விக்குறியானது.

- Advertisement -

இதையடுத்து வேறு ஒரு நடிகையை ஆடிவெள்ளி படத்தில் சீதா கேரக்டரில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது நடிகை திரிஷாவை ஆடி வெள்ளி படத்தில் நடிக்க வைக்க பேசப்பட்டு வருகிறது. மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த நயன்தாராவுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததால் ஆடிவெள்ளி ரீமேக் படத்தை நழுவ விட வேண்டாம் என்று திரிஷா நினைப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதனால் ஆடிவெள்ளி படத்தில் கண்டிப்பாக திரிஷா தான் கதாநாயகி என்றும் சொல்லப்படுகிறது. பாம்பு யானைகள் போன்ற விலங்குகளின் பங்களிப்பு 35 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆடி வெள்ளி படத்தில் இருந்தது. இப்போது இந்த படத்தில் கிராபிக்ஸ் மூலம் அந்த காட்சிகளை ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வரலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நிச்சயமாக இந்த காலகட்டத்துக்கு ஏற்ப திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுடன் இந்த படம் வெளியாகலாம். இயக்குனர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்